வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 21 மே, 2011

கனிமொழியை சிபிஐ கோர்ட்டில் சந்தித்த ராசாத்தி அம்மாள்-கண் கலங்கினார்

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு இன்று காலை டெல்லி சிபிஐ கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது முன்னாள் அமைச்சர் ராசா, திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, சன் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி உள்ளிட்டோர் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது கனிமொழியை சந்தித்த அவரது தாயார் ராசாத்தி அம்மாள் கண் கலங்கினார். பின்னர் விசாரணையின்போது கனிமொழிக்கு அருகே அவரது கைகளை இறுகக்கோர்த்தபடி அமர்ந்திருந்தார்.
ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பான தொடர் விசாரணையில் ராசா தொடர்ந்து ஆஜராகி வருகிறார். நேற்றும் கூட அவர் விசாரணைக்கு வந்திருந்தார். கனிமொழியை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதால் கனிமொழி கலக்கமடைந்து அழுதார். இதையடுத்து ராசா அவருக்கு ஆறுதல் கூறிப் பேசினார்.
இந்த நிலையில் இன்று விசாரணைக்கு வரும்போது கனிமொழி, சரத்குமார் ரெட்டி ஆகியோரை ஆஜர்படுத்த வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி இன்று காலை கோர்ட்டில் விசாரணை தொடங்கியபோது கனிமொழியும், சரத்குமார் ரெட்டியும் ஆஜர்படுத்தப்பட்டனர். ராசாவும் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டார்.
நேற்று ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டபோது அழுத முகத்துடன்காணப்பட்ட கனிமொழியிடம் இன்று சற்று தெளிவு காணப்பட்டது. அவரைப் பார்த்த தாயார் ராசாத்தி அம்மாள்தான் கண் கலங்கி விட்டார். மகளது கைகளைப் பிடித்துக் கொண்டு கண் கலங்கிய அவர், விசாரணை முடியும்வரை கனிமொழி அருகே கைகளைப் பிடித்தபடியே அமர்ந்திருந்தார்.
முன்னதாக கோர்ட்டுக்கு வந்த கனிமொழி அங்கு கூடியிருந்த செய்தியாளர்களைப் பார்த்து தனது வழக்கமான புன்னகையுடன் கடந்து சென்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’