வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 21 மே, 2011

புதிதாக நான்கு ஆணைக்குழுக்கள் ஜனாதிபதி மஹிந்தவினால் நியமனம்

நா ன்கு ஆணைக்குழுக்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார். பொதுச் சேவை ஆணைக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இலஞ்ச மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழு மற்றும் நிதி ஆணைக்குழு ஆகியனவே கடந்த 16 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளன.

ஒன்பது உறுப்பினர்களைக் கொண்டதாக பொதுச் சேவைகள் ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக கலாநிதி தயாசிறி பெர்ணாந்து நியமிக்கப்பட்டுள்ளார்.
உறுப்பினர்களாக பாலித எம். குமாரசிங்க திருமதி சிறிமாவோ ஏ.விஜேரத்ன எஸ். சி. மன்னப்பெரும ஆனந்த செனவிரத்ன என். எச். பத்திரன, எஸ். தில்லைநடராஜா எம்.டி.டபிள்யூ. ஆரியவன்ச, ஏ. மொஹமட் நஹியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நீதிவான் பிரியந்த ஆர்.பி. பெரேராவை தலைவராகக் கொண்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் உறுப்பினர்களாக திருமதி ஜெஸீமா இஸ்மாயில், டி.இ. ஆனந்தராஜா, டாக்டர் பேர்னாட் டி சொய்சா, ஆனந்த மெடின்ஸ் ஆகியோர் உள்ளனர்.
நிதி ஆணைக்குழுவுக்கு ஆரியரத்ன ஹேவகே தலைமை தாங்குகிறார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. _

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’