வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 21 மே, 2011

முற்றுமுழுதாக சேதமடைந்திருந்த புதுமுறிப்பு பாலம் நிர்மாணம் - ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் துரித நடவடிக்கை

முற்றுமுழுதாக சேதமடைந்திருந்த கிளிநொச்சி புதுமுறிப்பு பாலத்தினை புனரமைத்து வழமையான போக்குவரத்திற்கு ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
நேற்று (19) பாராளுமன்ற உறுப்பினர் சந்திகுமார் அவர்கள் தலைமையில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் வட மாகாணப் பணிப்பாளர் சிவராஜலிங்கம் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட பிரதான பொறியியலாளர் ஜெயவீரசிங்கம் அதன் நிறைவேற்று பொறியியலாளர் கௌசிகன் மற்றும் இராணுவப் பொறுப்பதிகாரி கேணல் அணில் சோமவீர ஆகியோர் குறித்த இடத்திற்கு விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை நேரில் ஆராய்ந்தனர்.

இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் எதிர்வரும் 27ம் திகதி கேள்வி பத்திரம் மூலம் ஒப்பந்தக்காரர்கள் தெரிவுசெய்யப்பட்டு இருபது இலட்சம் ரூபா செலவில் விரைவான புனர்நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படும் அதேவேளை புனர்நிர்மாணப்பணிகள் பூர்த்தியாகும் சிறிது காலத்திற்கும் பஸ் போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் அருகில் தற்காலிக ஏற்பாடும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்த அவர் கிளிநொச்சி டிப்போ -அக்கராயன் வீதியும் எதிர்வரும் மாதங்களில் நிரந்தரமாக புனரமைப்புச் செய்வதற்கான வேலைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. எனவே இவ்வருட முடிவுக்கு முதல் இவ் வீதியின் ஊடான புழுதி போக்குவரத்திற்கு முடிவுக்கட்டப்படும். அத்தோடு யூனியன்குளம் பாலமும் போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் தற்காலிக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நீண்ட காலமாக பல சிரமங்களுக்கு மத்தியில் தங்களது பயணங்களை மேற்கொண்ட மக்கள் உரிய அதிகாரிகளுடன் நேரில் வருகை தந்து நிலைமைகளை ஆராய்ந்து உரிய தீர்வினை பெற்றுத்தந்த பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்களுக்கு தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.













0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’