த ம்பி அக்கா கிணத்துல விழுந்துட்டேன்.... அம்மாட்ட சொல்லு.... இறங்காதே! இதுதான் ராஜா சுபா பேசிய கடைசி வசனம். நேற்று முந்தினம் சனிக்கிழமை கிணற்றில் நீர் எடுக்கச் சென்ற ராஜா சுபா(வயது-10) கிணற்றில் தவறிவிழுந்து மரணமடைந்தார்.
அந்தப் பத்து வயது சிறுமி கிணற்றில் சறுக்கி விழுந்தவுடன் மிகவும் பயந்துவிட்டிருக்கிறார் அவரது 6வயது தம்பி. பதற்றத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தானும் இறங்கத் தலைப்பட்டதைப் பார்த்த அக்கா தன்னுடைய ஆபத்தான நிலையிலும் தம்பியை எச்சரித்து, தம்பி நான் கிணற்றில் விழுந்துவிட்டேன் ஓடிப்போய் அம்மாட்ட சொல்லு இறங்காதே என்று கூறியிருக்கிறார்.
அந்த பத்து வயது சிறுமியின் புத்திசாதுர்யத்தையும் பதற்றமடையாமல் முடிவெடுக்கும் திறமையையும் எண்ணிப் போற்றுவதற்கு இன்று அவர்; எம்முடன் இல்லை.
இந்தக் கிணற்றில் இறங்கித்தான் தண்ணீர் எடுக்க வேண்டிய நிலையில் கந்தன்குளம் கிராம மக்கள் உள்ளனர்.
இந்தப் பகுதியில் முன்பு 90 குடும்பங்கள் வசித்துவந்துள்ளனர். 45 குடும்பத்தினர் சுமார் 20 வருடங்களின் பின்னர் கடந்த மாதம் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். நேற்று முந்தினம் சனிக்கிழைமை கிணற்றில் வீழ்ந்து மரணமான சுபாவின் இருதிக்கிரிகைகள் நேற்று ஞாயிற்றுக்கிமை இடம் பெற்றது.

___

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’