வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 21 மே, 2011

ராஜீவ்காந்தி நினைவு நாள்: ஜெயலலிதா தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி

றைந்த பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட நாளை (மே 21-ந்தேதி) ஆண்டுதோறும் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளாக அனுசரித்து உறுதிமொழி ஏற்கப்படுகிறது. நாளை அரசு விடுமுறை தினம் என்பதால் தமிழக அரசின் சார்பில் இன்று கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் விசேஷ பந்தல் அமைக்கப்பட்டு ராஜீவ் காந்தியின் திருஉருவ படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. பகல் 12 மணி அளவில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா வருகை தந்து ராஜீவ் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்து கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழியை வாசிக்க, அதை அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், தலைமை செயலக ஊழியர்களும் திரும்ப சொல்லி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சண்முகவேலு, கோகுல இந்திரா, கே.வி. ராமலிங்கம், எஸ்.பி. வேலுமணி, செந்தமிழன், செந்தில் பாலாஜி, ரமணா, மரியம்பிச்சை உள்பட அனைத்து அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள், தலைமை செயலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’