வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 18 ஏப்ரல், 2011

பாரவூர்தி சங்கத்தினருடன் கலந்துரையாடல்

யா ழ்.மாவட்ட பாரவூர்தி உரிமையாளர்கள் சங்கத்தினரை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சந்தித்துக் கலந்துரையாடினார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்றைய தினம் (17) யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற சந்திப்பில் பாரவூர்தி உரிமையாளர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் இடர்பாடுகள் தொடர்பாகவும் அமைச்சர் அவர்கள் கேட்டறிந்து கொண்டார்.

மகேஸ்வரி நிதியத்தின் ஊடாக வழங்கப்பட்டு வரும் மணலை ஏற்றி இறக்குவதில் பாரவூர்தி உரிமையாளர் சங்கத்தினர் அனைத்து பாரவூர்தி உரிமையாளர்களுக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் வகையில் ஒழுங்குகளுக்கு ஏற்ற முறையில் அனுமதி வழங்கவேண்டும்.

இப்புதிய நடைமுறை மே மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் இந்நடைமுறைக்கு அனைத்து உரிமையாளர்களும் ஒத்துழைப்பும் ஒத்தாசையும் வழங்க வேண்டுமெனவும் அமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.

இன்றைய கலந்துரையாடலின் போது மகேஸ்வரி நிதியத்தின் செயல் திட்ட இணைப்பாளர் ரஜீவ் பாரவூர்தி சங்க தலைவர் செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.










0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’