வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

ஐ.நா.பாதுகாப்புச் சபையில் இலங்கை தொடர்பான அறிக்கை?

லங்கை தொடர்பான ஐ.நா. நிபுணர் குழு சமர்ப்பித்த அறிக்கை, ஐ.நா. பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக ஐ.நா.வின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி செயலாளர் நாயகம் லியன் பெஸ்கோ கூறியுள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை விவகாரம் மற்றும் லியன் பெஸ்கோவின் கட்டார் மற்றும் கெய்ரோ விஜயம் ஆகியன தொடர்பாக பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் ஐ.நா. அரசியல் விவகார திணைக்களத்தினால் விபரிக்கப்படவுள்ளது என பாதுகாப்புச் சபையின் இருஅங்கத்தவர்கள் தெரிவித்ததாகவும் இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.
2009 ஆம் ஆண்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது இலங்கை விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட வேண்டும் என கொஸ்டாரிக்காவும் மெக்ஸிகோவும் கோரிக்கை விடுத்தன. எனினும் ரஷ்யா, சீனா மற்றும் ஏனைய சில நாடுகள் இணைந்து அதை தடுத்தன. அதன்பின் ஐ.நா. வளாகத்தில் சம்பிரதாயபூர்வமற்ற வகையிலான கலந்துரையாடல்கள் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையின் கசியவிடப்பட்ட பகுதிகள் இவ்விவகாரம் நோக்கப்பட்ட விதத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என பாதுகாப்புச் சபை அங்கத்தவர் ஒருவர் தெரிவித்ததாகவும் இன்னர் சிற்றி பிரஸ் கூறியுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’