வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 7 ஏப்ரல், 2011

'மகாவம்சத்தில் மஹிந்த ராஜபக்ஷ'

லங்கை ஆட்சியாளர்களின் சரிதத்தைக் குறிப்பதாகக் கூறப்படும் மகாவம்சத்தின் புதிய வெளியீட்டில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மூன்று அத்தியாயங்கள் ஒதுக்கப்படவுள்ளன.
இலங்கை கலாச்சார விவகார அமைச்சு இதனை இன்று அறிவித்துள்ளது.
''கிமு 543 இல் விஜயன் இலங்கைக்கு வந்தது முதல் மகாசேனன் மன்னனின் ஆட்சிக்காலம் வரை மகாவம்சம் விபரிக்கிறது. அதனுடன் இணைக்கப்பட்ட குலவம்சம் மற்றும் சூலவம்சம் ஆகியவை நான்காம் நூற்றாண்டு முதல் பிரித்தானியர்கள் 1815 இல் இலங்கையை கைப்பற்றும் காலம் வரையிலான சரிதத்தை விபரிக்கிறது'' என்று இலங்கை கலாச்சார அமைச்சின் செயலாளர் விமல் ரூபசிங்க கூறினார்.
அதனையடுத்து முன்னணி எழுத்தாளர்களால், அதனது 6 வது பாகத்தில் 1978 முதல் 2010 வரையிலான காலப்பகுதி குறித்து எழுதப்பட்டுவருவதாகவும், அதில் மஹிந்த ராஜபக்ஷ அவர்களது காலப்பகுதிக்காக மூன்று அத்தியாயங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
30 வருடகால பிரிவினைவாதப் போரை முடிவுக்கு கொண்டு வந்த ராஜபக்ஷவின் ஆற்றலுக்கு இணையாக மகாவம்சத்தில் எதுவும் கிடையாது என்று அவர் கூறியுள்ளார்.
கவிஞர் சேரன் கருத்து
புனைவு, கற்பனை, ஐதீகம், வரலாறு இவற்றின் கலவைதான் மகாவம்சம் என்று விமர்சித்துள்ள கவிஞர் சேரன், இலங்கை அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் தனக்கு ஆச்சரியத்தை தரவில்லை என்று கூறுகிறார்.
புனைவுகள் நிறைந்த பழைய மகாவம்சத்துக்கும், தற்போது இலங்கை அரசாங்கம் இணைக்கும் அத்தியாயங்களுக்கும் இடையே ஒரு வித்தியாசம் மாத்திரமே இருப்பதாகவும் கூறுகிறார். அதாவது பழைய மகாவம்சம் சம்பவங்கள் நிகழ்ந்த பல நூற்றாண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்டிருக்கிறது என்றும், இப்போது இவர்கள் போர் முடிந்து உடனேயே அதனை எழுதுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.
இலங்கை அரசாங்கத்தின் இந்த புதிய சேர்க்கையானது வரலாறு சார்ந்ததாக, ஆய்வுசார்ந்ததாக இருக்காது என்றும், இது அரசியல் சார்ந்ததாக, சுயநலம் சார்ந்ததாக, ஓர் நாட்டினுடைய அதிபரின் மிகை மதிப்பீடு சார்ந்ததாக, தன்னைப்பற்றிய மகோன்னதம் சார்ந்த கற்பனை சார்ந்ததாக இருப்பதாகக் கூறினார் சேரன் கூறினார். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’