பி ரதேச அபிவிருத்திச் செயற்பாடுகளில் மக்களும் பங்குதாரர்களாக மாறி பிரதேசத்தின் விரைவான அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்யவேண்டும் அந்த வகையில் இந்த பச்சிளைப்பள்ளி பிரதேசம் இதற்கோர் முன்னுதாரணமாக உள்ளது என ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கடந்த 4ம் திகதி கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச பேராலை கிராமத்தில் பொது நோக்கு மண்டபத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் இப்பிரதேச மக்கள் தங்களுடைய பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்து தீர்வினை பெற்றுக் கொள்வதற்காக அக்கறையோடு அனைவரும் ஒன்றுதிரண்டு முன் வருவார்கள் இது இம் மக்கள் தங்களுடைய பிரதேசத்தின் அபிவிருத்தியில் கொண்டுள்ள அக்கறையினையே புலப்படுத்துகிறது. இம்மாவட்டத்தில் தாமதமாக மீள்குடியேற்றம் செய்யப்பட்ட இப்பிரதேசம் விரைவில் அபிவிருத்தி செய்யப்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் தெரிவித்தார்
அரசின் அபிவிருத்தி திட்டங்கள் மக்களிடம் சென்றடைவதற்கு தாமதங்கள் தடைகள் ஏற்படுவதற்கு ஒப்பந்தக்காரர்களுக்கும் அதனை மேற்பார்வை செய்கின்ற உத்தியோகத்தர்களுக்குமான நெருக்கமான உறவே இதனால்தான் எம்மால் விரைவான நேர்த்தியான அபிவிருத்திச் செயற்பாட்டினை முன்னெடுத்துச்செல்ல முடியாமல் உள்ளது ஆனால் எல்லா அதிகாரிகளும் இவ்வாறு நடந்துகொள்வதில்லை சில அதிகாரிகள் மிகவும் நேர்மையாக மக்களுக்கான சேவையினை வழங்குகின்றார்கள்; அவ்வாறானவர்களை நாம் இந்த இடத்தில் பாராட்ட வேண்டும் என்றும் குறிப்பிட்ட சந்திரகுமார் அவர்கள் பிரதேச அபிவிருத்தி செயற்பாடுகளில் மக்கள் பங்காளியாக மாறும் போது அபிவிருத்தி வேலைத்திட்டங்களை கண்காணித்து அதில் ஏற்படுகின்ற தாமதங்கள் குறைபாடுகளை நீக்கி நேர்த்தியான அபிவிருத்தியினை விரைவாக முன்னெடுத்துச் செல்ல முடியும் எனத்தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து குறித்த பேராலை மக்களின் கோரிக்கைகளை கேட்டுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் தாமதமாக்கப்பட்டுள்ள பாடசாலை புனரமைப்பு வேலைகளை ஒரு வாரத்திற்குள் முடிப்பதற்கு உரிய அதிகாரிகளோடு பேசி நடவடிக்கை மேற்கொண்டதோடு பேராலை கிராமத்திற்கு ஒரு முன்பள்ளியினை அமைத்து தருவதாகவும் குறிப்பிட்டார்.
கிராம அபிவிருத்தி சங்க தலைவர் செல்வராசா தலைமையில் இடம்பெற்ற திறப்புவிழா நிகழ்வில் பிரதேச செயலர் திரு. முகுந்தன் பாடசாலை அதிபர் ரஞ்சிதமலர் உதவி திட்டமிடல் பணிப்பாளர் கேதீஸ்வரன் யு.என்.டி.பி.நிறுவன திட்ட இணைப்பாளர் சுதர்சன் அதன் பொறியியலாளர்கள் கடகோபன் கார்த்திக் பிரதேச இராணுவ அதிகாரி கப்டன் ஜயரட்ன மற்றும் பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’