ல ங்கா ஈ நியூஸ் செய்தி இணையத்தள அலுவலக தீவைப்பு வழக்கின் சந்தேக நபர் ஒருவரை மிரட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட அந்த இணையத் தளத்தின் செய்தியாசிரியர் பென்னட் ரூபசிங்க வியாழனன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கடுவெல நீதிமன்ற நீதவான் இதற்கான உத்தரவை பிறப்பித்திருந்தார்.
குறித்த வழக்கின் புலன்விசாரணைகள் முடியாத காரணத்தினால், அவருடைய விளக்கமறியலைத் தொடர வேண்டும் என்று பொலிஸார் கோரிய போதிலும் அதனை நீதிமன்றம் நிராகரித்து விட்டதாக ரூபசிங்க சார்பிலான சட்டத்தரணி கூறியுள்ளார்.
இந்த வழக்கு விசாரணை நடந்தபோது நீதிமன்றத்தின் முன்பாக, பென்னட் ரூபசிங்கவை விடுதலை செய்யக்கோரி ஒரு அமைதி ஆர்ப்பாட்டம் நடந்தது.
பொலிஸார் தமது அதிகாரங்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ண்ட ஒரு ஊடகவியலாளர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’