வடக்கு ,கிழக்கு மக்களை பயங்கரவாதத்திலிருந்து மீட்டு அம்மக்கள் நன்மையடையும் வகையில் பொருளõதார அபிவிருத்தி திட்டங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டுவருகையில் அதனை தடுப்பதற்கு சில சக்திகள் முயற்சிக்கின்றன. அந்த சக்திகளின் தூண்டுதல் காரணமாகவே சர்வதேச மட்டத்தில் சில தரப்புக்கள் யுத்தக் குற்றம் பற்றி பேசுகின்றன என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கம் எப்போதும் தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலேயே செயற்படுகின்றது. அது அரசாங்கத்தின் கடமையாகும். அமெரிக்க அரசாங்கம் கூட தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்தே செயற்படும் என்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.
யுத்தக் குற்றம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் இலங்கை இழுக்கப்படும் அபாயம் உள்ளதாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ரொபட் பிளேக் தெரிவித்துள்ளமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா மேற்கண்டவாறு கூறினார்.
அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது வடக்கு கிழக்கு பகுதியில் இடம்பெறும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை தடுப்பதற்கு சில தரப்புக்கள் முயற்சிக்கின்றன. பல்வேறு நகர்வுகள் இவற்றை எம்மால் புரிந்துகொள்ள முடியுமாகவுள்ளது.
பயங்கரவாதத்தின் பிடியிலிருந்த மக்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் தற்போது சுதந்திரமாக வாழ்கின்றனர். இந்நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் பொருளாதார ரீதியில் அபிவிருத்தி அடைவதை விரும்பாத சில சக்திகள் உள்நாட்டில் இருக்கின்றன. அவ்வாறான சக்திகளின் தூண்டுதல் காரணமாக சர்வதேச மட்டத்தில் சிலர் யுத்தக் குற்ற விடயம் குறித்து பேசுகின்றனர்.
மேலும் வெளிநாடுகளுக்கு சென்று அகதி அந்தஸ்தை பெற எதிர்பார்ப்பவர்களும் இவ்வாறான கூற்றுக்களை முன்வைத்து இலாபம் அடைய முயற்சிக்கின்றனர். ஆனால் அரசாங்கம் தளராமல் தனது வேலைத்திட்டங்களை முன்கொண்டுவருகின்றது.
கடந்தகால தவறுகள் தொடர்பில் பாடங்களை கற்றுக்கொள்ளவே அரசாங்கத்தினால் கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அதில் யார் வேண்டுமானாலும் சாட்சியமளிக்கலாம். அந்த ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க இன்னும் சந்தர்ப்பம் உள்ளது. எந்தவொரு அரசாங்கமும் தனது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது வழமையாகும். அமெரிக்க அரசாங்கமும் தனது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்தும் வழங்கியே செயற்படும். அது போன்று எமது அரசாங்கமும் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கின்றது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’