வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 3 மார்ச், 2011

போர்க் குற்றம் குறித்து பொறுப்புக்கூறும் சர்வதேச பொறிமுறை வேண்டும்: அமெரிக்க செனட்சபை தீர்மானம்

போர் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு சுயாதீனமான சர்வதேச பொறுப்புக்கூறும் பொறிமுறையொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் என இலங்கை அரசாங்கத்தையும் சர்வதேச சமூகத்தையும் ஐ.நாவையும் கோரும் தீர்மானமொன்றை அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபை நிறைவேற்றியுள்ளது.

ளு. சுநள 84 என்ற இத்தீர்மானம் இன்று செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது. யுத்த காலத்தில் இடம்பெற்றிருக்கக் கூடிய மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பொறுப்புக்கூறுவதை உறுதிப்படுத்துவதற்கு நம்பகமான முறையான பொறிமுறையொன்றை இலங்கை அரசாங்கம் வழங்குவது தொடர்பான கரிசனையை இது வெளிப்படுத்துகிறது என அமெரிக்க தூதுரக அதகாரியொருவர் இன்று தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கை அரசாங்கம் இவ்விடயத்தை ஆராய்ந்து பொருத்தமான மாற்றங்களை செய்யும் என வெளிவிவகார பிரதியமைச்சர் நியோமால் பெரேரா தெரிவித்தார்.
பென்சில்வேனியா மாநிலத்தைச் சேர்ந்த செனட்டர் ரொபர்ட் கசே கொண்டுவந்த மேற்படி தீர்மானம் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’