வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 3 மார்ச், 2011

உணவு நஞ்சானதால் 20 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

ணவு நஞ்சானதால் வெல்லவாயா பிரதேசத்திலுள்ள மலட்டவல தேசியப் பாடசாலையைச் சேர்ந்த 20 மாணவர்கள் இன்று வியாழக்கிழமை காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இம்மாணவர்களுக்கு நண்பகல் வேளை உணவாக சோறும் பருப்புக்கறியும் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலையில் இலவசமாக நண்பகல் வேளையில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட பின்னர் 20 மாணவர்கள் சுகவீனமுற்ற நிலையில் வெல்லவாய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இம்மாணவர்கள் வயிற்று வலிக்கு உள்ளானதாகவும் இருப்பினும் அவர்கள் தற்போது ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் வெல்லவாய மாவட்ட வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, பொதுசுகாதார அதிகாரியொருவரின் கண்காணிப்பிலேயே நண்பகல் வேளைக்கான உணவு தயாரிக்கப்பட்டதாக வெல்லவாய வலயக் கல்வித் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி கூறினார். பொதுசுகாதார அறிக்கை கிடைத்ததும் விசாரணை மேற்கொள்ளப்படுமெனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் மாணவர்களுக்கு தரமான உணவே வழங்கப்பட்டதாக அப்பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’