வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 3 மார்ச், 2011

மருதங்கேணி பாடசாலைகளுக்கு அமைச்சர் நிதியுதவி

டமராட்சி கல்வி வலயத்தின் மருதங்கேணி கோட்டத்திற்குட்பட்ட மூன்று பாடசாலைகளின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டிகளுக்காக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நிதியுதவி வழங்கினார். (படம் இணைக்கப்பட்டுள்ளது)
வடமராட்சி கிழக்குப் பகுதியில் மக்கள் மீளக்குடியேறிள்ள நிலையில் மாமுனை இந்து தமிழ்க் கலவன் பாடசாலை ஆழியவளை சீ.சீ. தமிழ்க் கலவன் வித்தியாலயம் செம்பியன்பற்று றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைச் சமூகங்களால் அமைச்சர் அவர்களிடம் நிதியுதவி கோரப்பட்டிருந்தது.

அதன் பிரகாரம் பாடசாலைகளின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டிகளை நடாத்தும் விதமாக மூன்று பாடசாலைகளுக்கும் தனித்தனியான காசோலைகளை இன்றைய தினம் யாழ்ப்பாணத்திலுள்ள அமைச்சரவர்களது யாழ் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.

இக்காசேலைகளை மாமுனை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அதிபர் சந்திரமோகனும் ஆழியவளை சீ.சீ.தமிழ்க் கலவன் வித்தியாலய அதிபர் பாஸ்கரனும் செம்பியன்பற்று றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலை அதிபர் ஜெயச்சந்திரனும் பெற்றுக் கொண்டனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’