வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 21 மார்ச், 2011

அக்கரைப்பற்று முதல் மேயராக அமைச்சர் அதாவுல்லாவின் புதல்வர் சக்கி அதாவுல்லா

க்கரைப்பற்று மாநகர சபையின் முதல் மேயராக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் புதல்வரான சக்கி அதாவுல்லா நியமிக்கப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் இணையத்தளத்திற்கு தெரிவித்தன.

அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் சார்பாக அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில் போட்டியிட்ட சக்கி அதாவுல்லா 7,900க்கு மேற்பட்ட அதிகூடிய வாக்குளை பெற்றார்.
தற்போது சக்கி அதாவுல்லா, உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் அந்தரங்க செயலாளராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இரண்டாவது அதிகூடிய வாக்குகளை பெற்ற முஹம்மட் றிஸான், பிரதி மேயராக நியமிக்கப்படலாம் என தேசிய காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பில் அமைச்சர் அதாவுல்லாவை தொடர்புகொள்ள பலமுறை முயற்சித்தும் பயனளிக்கவில்லை.
அக்கரைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் முஹம்மட் தவம் மற்றும் பிரதி தவிசாளர் முஹம்மட் சபீஸ் ஆகியோர் அக்கரைப்பற்று மாநகர சபை தேர்தலில் 4,000 மேற்பட்ட வாக்குகளை பெற்று முறையே 3ஆம் மற்றும் 4ஆம் இடங்களில் தெரிவுசெய்யப்பட்டனர்.
அக்கரைப்பற்று பிரதேச சபை மாநகர சபையாக கடந்த ஜனவரி மாதம் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சினால் தரமுயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’