நடந்து முடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தல் முடிவுகளின் ஊடாக நாட்டு மக்கள் சர்வதேசத்துக்கு சிறந்த செய்தியை வெளிப்படுத்தியுள்ளனர். போருக்குப் பின்னர் நாட்டில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் வேலைத்திட்டங்களுக்கு மக்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளனர் என்பதனை சர்வதேசம் புரிந்துகொள்ளவேண்டும் என்று மனித உரிமைகள் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் எதனைக் கூறினாலும் எவ்வாறான குற்றச்சாட்டை மேற்கொண்டாலும் மக்கள் அரசாங்கத்தின் மீது பாரிய நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது தேர்தல் முடிவுகள் மூலம் தெளிவாகின்றது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பில் தகவல் வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் மஹிந்த சமரசிங்க இது தொடர்பில் மேலும் கூறியதாவது: தேர்தல் முடிவுகளின் ஊடாக நாட்டு மக்கள் சர்வதேச சமூகத்துக்கு சிறந்த செய்தியை வழங்கியுள்ளனர். தற்போதைய அரசாங்கத்தின் மீதான நாட்டு மக்களின் நம்பிக்கை மீண்டும் ஒருதடவை நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனை சர்வதேசம் புரிந்துகொள்ளவேண்டும். அத்துடன் யுத்தத்துக்கு பின்னர் அரசாங்கத்தினால் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைத்திட்டங்களுக்கு மக்கள் அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்க்கட்சிகள் எவ்வாறான குற்றச்சாட்டுக்களை அரசாங்கத்தின் மீது சுமத்தினாலும் மக்கள் அவற்றை நம்பாமல் அரசாங்கத்துக்கு தமது ஆதரவை வெளியிட்டுள்ளனர். எனவே எமது பயணம் வெற்றிகரமாக தொடரும். அத்துடன் இந்த தேர்தல் வெற்றி எமக்கு பல விடயங்களை மேலும் வெளிப்படுத்தியுள்ளது.
அதாவது மக்களின் எதிர்பார்ப்புக்களை நாங்கள் துரித கதியில் நிறைவேற்றவேண்டும் என்ற வலியுறுத்தலையும் இந்த தேர்தல் ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிவருகின்றது. எனினும் மேலும் வலுவான முறையில் அவற்றை நிறைவேற்றவேண்டும் என்று எண்ணுகின்றோம்.
உள்ளூராட்சிமன்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு மக்களின் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. எனவே அப்பிரதேசங்களின் உட்கட்மைப்பு மேம்படுத்தல்கள் அபிவிருத்தி மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சுக்களை நடத்தவேண்டும்.
அரசாங்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் மூன்றுசுற்று பேச்சுக்களை நடத்தியுள்ளது. தொடர்ந்து கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்துக் தமிழ்க் கட்சிகளுடனும் பேச்சு நடத்த அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’