நடிகர் விஜயகாந்த தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் அஇ அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொகுதிப் பங்கீட்டு பேச்சுக்களுக்காக, வெள்ளிக்கிழமை இரவு அஇ அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் நடிகர் விஜயகாந்த சந்தித்தார்.
இதனையடுத்து இரண்டு கட்சிகளுக்கும் இடையில் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாடு குறித்து அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே புதிய தமிழகம் கட்சி 2 தொகுதிகளும் மனித நேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகளும் மூவேந்தர் முன்னேற்ற கழகத்துக்கு ஒரு தொகுதியும் அளிப்பது என கூட்டணி அறிவித்துள்ளது.
இதேவேளை அஇ அதிமுக கூட்டணியிலுள்ள இடதுசாரி கட்சிகள் மற்றும் வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கான தொகுதிப் பங்கீடுகள் குறித்த அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’