வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 4 மார்ச், 2011

போலி இணையத்தள காதலிக்கு 2 கோடி ரூபா அனுப்பி ஏமாந்த நபர்

மெரிக்காவை சேர்ந்த நபரொருவர் நேரில் சந்திக்காத போலி இணையத்தளத்தள 'காதலிக்காக' 2 இலட்சம் அமெரிக்க டொலர்களை (சுமார் 2 கோடி ரூபா) அனுப்பி ஏமாந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

நேபர்விலேவை நகரைச் சேர்ந்த 48 வயதுடைய இவர் கடந்த இரண்டரை வருடங்களாக இணையத்தளம் மூலம் இப்பெண்ணுக்கு பணம் அனுப்பியதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். அவருடைய பெயரை வெளியிட பொலிஸார் விரும்பவில்லை.
நைஜீரியா, மலேஷியா, லண்டன், மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலுள்ள வங்கிக் கணக்குகளுக்கு அவர் பணம் அனுப்பியுள்ளார்.
குறித்த நபர் அப்பெண்ணின் அடையாள அட்டையொன்றை வைத்திருந்தார். அது புளோரிடா மாநிலத்தின் மாதிரி சாரதி அடையாள அட்டை எனத் தெரிவிக்கப்பபடுகிறது.
அண்மையில் தனது காதலி லண்டனில் கடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்த அவர் அப்பெண்ணை மீட்குமாறும் கோரினார்.
ஆனால் விசாரணையின் பின்னர் அப்படியொரு பெண்ணே இல்லையென பொலிஸார் தெரிவித்தபோது பெரும் அதிர்ச்சியடைந்தாராம் அந்நபர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’