வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 4 மார்ச், 2011

பாபர் மசூதி: அத்வானிக்கு எதிராக மீண்டும்

பாபர் மசூதி இடிப்பு வழக்கில், அத்வானி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற மத்திய புலனாய்வுத் துறையின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.

1992 ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தில், சதித்திட்டம் தீட்டியதாக அத்வானி உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கை மீண்டும் தொடர வேண்டும் என்று கோரி புலனாய்வுத்துறை மனுத்தாக்கல் செய்திருந்தது.
இது தொடர்பாக, நான்கு வாரங்களுக்குள் தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு அத்வானி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் அத்வானி உள்ளிட்டோருக்கு எதிரான கிரிமினல் சதித்திட்ட குற்றச்சாட்டு தொடர்பாக, விசாரணையைத் தொடர முகாந்திரமில்லை என்று கூறி சிறப்பு நீதிமன்றம் முன்னர் கூறியிருந்தது.
அந்த உத்தரவை அலகாபாத் உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது.
அதை எதிர்த்து, மத்திய புலனாய்வுத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தமை குறிப்பிடத்தக்கது.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’