இணையத்தளம் மூலம் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைளில் ஈடுபட்டவந்த 184 பேரை பல்வேறு நாடுகளிலுள்ள பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் 230 சிறார்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய பொலிஸ் அமைப்பான யூரோபோல் இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த வலையமைப்புக்கு 30 நாடுகளில் தொடர்பிருப்பதாகவும் சுமார் 70,000 பேர் அங்கம் வகிப்பதாகவும் யூரோபோல் தெரிவித்துள்ளது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட இத்தகைய மிகப்பெரிய சிறுவர் துஷ்பிரயோக முறியடிப்பு நடவடிக்கை இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது.
670 சந்தேக நபர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். 184 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். 230 சிறார்கள் மீட்கப்பட்டுள்ளனர் என யூரோபோல் பணிப்பாளர் ரொப் வெய்ன்ரைட் நெதர்லாந்தின் ஹேக் நகரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் எனவும் அவர் கூறினார்.
பிரிட்டனில் 121 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அங்கிருந்து 60 சிறார்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்து, அவுஸ்திரேலியா, இத்தாலி, கனடா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் சந்தேக நபர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பபடுகிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’