வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 16 மார்ச், 2011

மதிமுக -அதிமுக கூட்டணி இழுபறி

ரும் ஏப்ரம் மாதம் நடக்கவுள்ள தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதிமுகவுக்கு வெறும் 8 இடங்களை மட்டுமே ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளது. இதை ஏற்க மதிமுக மறுக்கிறது.
கடந்த முறை மதிமுகவுக்கு 35 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.

இம்முறை கூட்டணியில் அதிக கட்சிகள் இடம்பெற்றுள்ளதால் பேச்சு வார்த்தைகளின் போது மதிமுக தாம் போட்டியிட விரும்பும் இடங்களின் எண்ணிக்கையை 25 என்ற அளவுக்கு குறைத்துக் கொள்ள முன்வந்ததாகவும் ஆனால் அதிமுக தாம் தர விரும்பும் தொகுதிகளின் எண்ணிக்கையை ஒற்றை இலக்கத்திலேயே வைத்திருப்பதாகவும் மதிமுகவின் செய்தித் தொடர்பாளர் நன்மாறன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
வரும் சனிக்கிழமை நடக்கும் உயர்மட்டக் கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இடதுசாரிகளுடன் திங்களன்றுதான் அக்கட்சி தொகுதி உடன்பாட்டை இறுதி செய்தது.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’