இன்றைய நிலையில் தமிழ் மக்கள் பிச்சையெடுக்கும் சூழலையே இந்த அரசாங்கம் உருவாக்கியுள்ளது. யுத்தத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களே சின்னாபின்னமாக அழிக்கப்பட்டது. இப்பகுதியில் ஒரு சில பகுதிகளிலேயே மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மக்களுக்கு அதைக் கட்டிக்கொடுக்கிறோம், இதைக்கட்டிக் கொடுக்கிறோம் என மக்களை ஏமாற்றி வருவதுடன் உலக நாடுகளையும் இந்த அரசாங்கம் ஏமாற்றி வருகிறது என அரசாங்கத்தை சாடியுள்ளார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி
.உள்ளூராட்சி தேர்தலில் வலி. மேற்கு பிரதேச சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களை பண்டத்தரிப்பில் சந்தித்தபோதே இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழரசு கட்சியுடன் வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி அமைப்பாளர் பேராசிரியர் சிற்றம்பலம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மேலும் உரையாற்றிய கூட்டணியின் தலைவர்...
'இன்றைய நிலையில் தமிழ் மக்கள் பிச்சையெடுக்கும் சூழலையே இந்த அரசாங்கம் உருவாக்கியுள்ளது. யுத்தத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களே சின்னhபின்னமாக அழிக்கப்பட்டது. இப்பகுதியில் ஒரு சில பகுதிகளிலேயே மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மக்களுக்கு அதைக் கட்டிக்கொடுக்கிறோம், இதைக்கட்டிக் கொடுக்கிறோம் என மக்களை ஏமாற்றி வருவதுடன் உலக நாடுகளையும் இந்த அரசாங்கம் ஏமாற்றி வருகிறது.
அண்மையில் வெளிநாட்டுத் தூதுவர் ஒருவர் தெரிவிக்கையில் தமிழ் மக்களுக்கு வீடுகளையோ அல்லது ஒரு கிராமத்தையோ நாம் கட்டிக்கொடுக்க முன்வரும்போது இந்த அரசாங்கம் நாம் கட்டிக் கொடுக்கிறோம் பணத்தைத் தருமாறு கேட்கிறது. இவ்வாறான நிலையில் நாம் என்ன செய்ய முடியும் என வெளிநாட்டுத் தூதுவர் கேட்கின்றார்.
வெளிநாடுகளின் உதவியுடன் ஒருசிலவற்றைக் கட்டிக்கொடுக்கின்றபோது அதை தாம் கட்டியதாக விளம்பரப்படுத்துகிறார்கள். யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதும் ஓமந்தை முதல் யாழ்ப்பாணம் வரையிலான ஏ9 வீதி மற்றும் ஏ35 வீதி, முல்லைத்தீவு - கிளிநொச்சி பிரதான வீதிகள் எங்கேயாவது புனரமைப்புக்கென கற்கள் பறிக்கப்பட்டுள்ளதா? இவற்றைச் செய்யாது வடக்கில் வசந்தம் வீசுகிறது என அரசாங்கம் தெரிவிக்கிறது. இங்கு புயலே வீசுகிறது.
ஜனாதிபதியை தமிழ் கட்சிகளின் அரங்கத்தினூடாக இறுதியாகச் சந்தித்தபோது நாம் கேட்டோம், பயங்கரவாதம் அழிக்கப்பட்ட போது அழிக்கப்பட்ட பகுதிகளை நாம் மீளவும் கட்டித்தருவோமென தெரிவித்தீர்கள் இதனைச் செய்யலாமே எனக் கேட்டோம். அதற்கு எனது தேர்தல் பிரசாரமே அது எனப் பதிலளித்தார். இவ்வாறான ஜனாதிபதி, தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வினைத் தருவாரா?
இன்றைய சூழலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பல கட்சிகள் ஒன்றிணைந்துள்ளோம். இந்த இணைவு தொடர்ந்து நீடிக்கும். எனவே இந்த உள்ளூராட்சித் தேர்தலில் நாம் கட்சி பேதங்களை மறந்து ஒருமித்த குரலாக போட்டியிட்டு அனைத்து பிரதேச சபைகளையும் வென்றெடுப்போம். இத்தேர்தல் தொடர்பாக அரச கட்சிக்காரர் சரி, ஏனைய கட்சிக்காரர் சரி வந்தால், இந்தத் தேர்தலானது எமது மக்களின் அபிவிருத்திக்கான தேர்தலாகும். அரசாங்கம் தெரிவிப்பது போல் அங்கொன்றும் இங்கொன்றும் கட்டடம் அமைப்பதல்ல. போட்டியிடுபவர்கள் தலைவர்களாகவோ முடிசூட்டப்படுபவர்களாகவோ இந்தத் தேர்தலில் இல்லை. எமது பிரதேசத்தின் அபிவிருத்தியே எமது இலக்கு ஆகும் எனத் தெரிவியுங்கள்.
உயர் பாதுகாப்பு வலயங்களில் கண்ணிவெடி அகற்றுவதற்கு வெளிநாடுகளில் இருந்து உதவிகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் மக்களின் உதவிகள் இல்லாது இதனை எவ்வாறு செய்ய முடியும்? படையினரை சந்திக்குச் சந்தி நிறுத்தி வைத்து பயங்கரவாதம் இருக்கிறது என்பதைக் காட்டுவதற்கே அரசாங்கம் இவ்வாறான செயல்களைச் செய்கிறது. எமக்கு கட்டடங்கள் தேவையில்லை, எமக்கு நின்மதியான வாழ்க்கையே தேவை..'' எனத் தெரிவித்தார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’