வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

நல்லிணக்க ஆணைக்குழு சிபார்சுகளை நடைமுறைப்படுத்த இடைக்காலக் குழு

ல்லிணக்க ஆணைக்குழு சிபார்சுகளை நடைமுறைப்படுத்த இடைக்கால குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை ஏற்று அவற்றை இடைக்காலத்துக்கு நடைமுறைப்படுத்துவதன் மூலம் அந்த ஆணைக்குழுவை வலுப்படுத்த முடியும் என்றும் அமைச்சர் பீரிஸ் சுட்டிக் காட்டுகின்றார்
.பிரஸ்தாப இடைக்காலக் குழுவில் பாதுகாப்புச் செயலாளர், பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர், நீதியமைச்சின் செயலாளர், புனருத்தாரண மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர், வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், மற்றும் ஜனாதிபதி விசேட செயலணியின் செயலாளர் ஆகியோர் அங்கம் வகிக்கவுள்ளனர்.
அதற்கான பணிப்புரையை ஜனாதிபதி வழங்கியுள்ளார் என்றும் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார். நீண்ட கால பிணக்கு மற்றும் மோதல்களில் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை மீள ஆற்றுப்படுத்துவதன் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே குறித்த ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவிக்கின்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’