எனக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டையும் கூறுங்கள், ஆனால் தாங்கள் பிறந்த நாட்டுக்குத் துரோகம் இழைக்காதீர்கள். எமது நாட்டை வெளிநாடுகளுக்குக் காட்டிக்கொடுக்காதீர்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
மொனராகலை புத்தலவில் 5 ஆவது, தேசத்திற்கு மகுடம் கண்காட்சியின் ஆரம்ப விழா நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றபோது அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். வதந்திகளைப் பரப்பும், சேறு பூசும் பிரசாரங்களை மேற்கொள்ளும் அரசியல் நோயாளிகளுக்கு மத்தியில் மிகவும் சுகதேகியாக தான் இருப்பதாகவும் ஜனாதிபதி கூறினார். ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றுகையில் கூறியதாவது:
'சுதந்திரத்திற்காக உயிர்த்தியாகம் செய்த வரலாறு இந்த ஊவா வெல்லஸ்ஸ பிரதேச மக்களுக்கு உண்டு. தேசத்திற்கு மகுடம் கண்காட்சி இம்மண்ணில் நடைபெறுவது மிகப் பொருத்தமானது.
இப்பகுதிக்கு அருகில் கிழக்கில் ஒலுவில் துறைமுகம் அமைக்கப்படுகிறது. அம்பாந்தோட்டை மாகம்புரை துறைமுகத்திற்கு முதலாவது கப்பல் அண்மையில் வந்தது. இப்பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் மூலம் கிராமங்கள் நாட்டிலும் உலகிலும் பிரபல்யமாகி வருகின்றன. கொழும்பிலுள்ள சிலருக்கு இக்கிராமங்களின் பெயராவது தெரியுமா என்பதும் சந்தேகமே.
முன்னர் கிராம மக்கள் கிரிக்கெட் போட்டிகளை பார்வையிட வேண்டுமானால் கொழும்புக்குத்தான் செல்ல வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் இன்னும் சில நாட்களில் உலகப் புகழ்பெற்ற வீரர்கள் இங்கு வந்து உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடவுள்ளனர். இப்போட்டிகளை பார்வையிட்டால் மாத்திரம் போதாது. இங்கிருந்தும் அத்தகைய வீரர்கள் உருவாக வேண்டும்.
முன்னரும் இதுபோன்ற சில 'உதா கம்' விழாக்கள், களியாட்ட விழாக்கள் இடம்பெற்றன. ஆனால் அவ்விழா நடைபெற்ற ஓரிரு இடங்களைத் தவிர ஏனைய இடங்கள் காடாகிவிட்டன. ஆனால் நாம் வெறுமனே கண்காட்சியை மாத்திரம் நடத்தவில்லை. தேசத்திற்கு மகுடம் நிகழ்வை நடத்துவதன் மூலம் அந்த பிரதேசத்தை கட்டியெழுப்ப முயற்சிக்கிறோம்.
ஊவா வெல்லஸ்ஸ பகுதியைக் கட்டியெழுப்புவது என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பாகும். அப்பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். எதிர்வரும் தசாப்த காலத்தில் இம்மண்ணிலிருந்து செய்மதி ஏவப்பட்டால் ஆச்சரியமில்லை. அதுதான் எமது இலக்காக இருக்க வேண்டும். இலங்கையை வர்த்தக கேந்திர நிலையமாகக் கட்டியெழுப்ப வேண்டும். பங்குச் சந்தை கொடுக்கல் வாங்கல்கள் அதிகரித்துள்ளன. நாம் நாட்டை பொறுப்பேற்றபோது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மட்டும் அல்ல, சுற்றுலா பயணிகள்கூட இங்கு வரவில்லை.
உலகிலேயே மிகக் குறைந்த விலைக்கு உரத்தை விநியோகிப்பது ஊவா வெல்லஸ்ஸ விவசாயிகள் போன்றோர் மீதான நம்பிக்கையினால்தான். மரக்கறி விலைகள் அதிகரித்திருந்தன. தற்போது சிலவற்றின் விலைகள் குறைந்துள்ளன. பம்பாய் வெங்காயத்தின் விலை குறைவடைந்தாலும் சின்ன வெங்காயத் தின் விலை குறையவில்லை தானே. விவசாயிகளுக்கும் தமது பொருட்களுக்கு சிறந்த விலையொன்று கிடைக்க வேண்டும். அவர்கள் மீது நம்பிக்கை வைக்கவேண்டும்.
"புலிகள் மாத்திரமல்லாமல், நாட்டையும் அரசாங்கத்தையும் அழிக்க முனையும் பொய்ப் பிரசாரங்கள் மூலம் பதவிக்கு வருவதற்காகவும், சில சக்திகள் அரசாங்கத்துக்கு எதிராக சேறு பூசும் பிரசாரங்களை மேற்கொள்வதுடன் பல்வேறு வதந்திகளையும் பரப்பி வருகின்றனர். இத்தகைய அரசியல் நோயாளிகளுக்கு மத்தியில் மிகவும் சுகதேகியாக நான் இருக்கிறேன். வதந்திகள் காரணமாக, எனக்கு வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளித்து அலுத்துவிட்டது.
எனக்காக பிரார்த்தனை செய்ய வேண்டுமா? போதி பூஜை செய்ய வேண்டுமா? என பௌத்த பிக்குகள் கேட்கிறார்கள். மருத்துவர்கள் தொடர்புகொண்டு எந்த வேளையில் உதவி தேவைப்பட்டாலும் தொலைபேசியில் அழையுங்கள் எனக் கூறுகின்றனர். நான் சுகதேகியாகவுள்ளேன்" என்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’