இன்றைய நிலையில் தமிழ் மக்கள் பிச்சையெடுக்கும் சூழலையே இந்த அரசாங்கம் உருவாக்கியுள்ளது. யுத்தத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களே சின்னாபின்னமாக அழிக்கப்பட்டது. இப்பகுதியில் ஒரு சில பகுதிகளிலேயே மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மக்களுக்கு அதைக் கட்டிக்கொடுக்கிறோம், இதைக்கட்டிக் கொடுக்கிறோம் என மக்களை ஏமாற்றி வருவதுடன் உலக நாடுகளையும் இந்த அரசாங்கம் ஏமாற்றி வருகிறது என அரசாங்கத்தை சாடியுள்ளார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி
-













