லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலவாக்கலை சென்கூம்ஸ் தோட்டத்தில் நான்கு பிள்ளைகளுக்குத் தாயான பெண்ணொருவரை கணவர் கத்தியால் வெட்டி கொலை செய்த சம்பவமொன்று நேற்று பெற்றுள்ளது.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 30 வயதான கிருஷ்ணன் சரோஜா என்பவராவார். சந்தேக நபரான கணவர் ( பி.மணி ) லிந்துலை பொலிஸில் சரணடைந்துள்ளார். இந்தக் கொலைச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது :
மதுப்போதைக்குப் பழக்கமான கணவர் மது போதையுடன் நேற்று இரவு வீட்டுக்கு வந்து உறங்கி கொண்டிருந்த மனைவியை எழுப்பி உணவு பரிமாறு கூறியுள்ளார். அதன் போது சமைத்து வைக்கப்பட்டுள்ள உணவை எடுத்து உண்ணுமாறு மனைவி கூறியுள்ளார். இதன் போது கோபமடைந்த கணவன் கவ்வாத்து கத்தியை எடுத்து உறங்கிக்கொண்டிருந்த மனைவியின் வயிற்றுப்பகுதியில் வெட்டியுள்ளார்.
அந்தப்பெண் வலிதாங்காமல் கதறவே அயலவர்கள் அவரை உடனடியாக லிந்துலை வைத்தியசாலைக்கு எடுத்தச்சென்ற போது வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
நுவரெலியா நீதிமன்ற நீதிவானின் விசாரணைக்காக இந்தப்பெண்ணின் சடலம் தற்போது லிந்துலை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கொலை செயய்யப்பட்ட இந்தப்பெண்ணின் கணவரான சந்தேக நபர் லிந்துலை பொலிஸில் சரணடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக லிந்துலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி செல்வகுமார் தலைமையிலான பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’