வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 5 பிப்ரவரி, 2011

அநுராதபுர மாவட்டத்தில் சுற்றுல்லாவுக்கு தற்காலிக தடை

நுராதபுர மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக சுற்றுல்லா பயணிகளின் வருகை தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, மாவட்டத்தின் அனைத்து குளங்களின் வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன.
இதனால் அநுராதபுரம் - மாத்தளை சந்தி, அநுராதபுர சந்தை பகுதி, அநுராதபுர நகர், அனுதாபுர புனித பிரதேசம், ஹொரவப்பொத்தானை மற்றும் A-9 வீதி என்பன வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அடை மழை காரணமாக அநுராதபுர மாவட்டத்தில் சுமார் 85,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் அநுராதபுரம் மஹஜன விளையாட்டரங்கு, நச்சியதீவு முஸ்லிம் மகா வித்தியாலம் மற்றும் உறுவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
சுமார் 300 வீடுகள் முழுமையாகவும் பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தில் முழுமையாக மூழ்கிய பகுதிகளிலுள்ள மக்களை காப்பற்றும் நடவடிக்கையில் இலங்கை விமான படையின் விமானங்கள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’