வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 3 பிப்ரவரி, 2011

விசா அனுமதியின்றி கொழும்பில் தங்கியிருந்த புலி சந்தேகநபர் கைது

லங்கையில் விசா அனுமதியின்றி தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் எனக் கூறப்பட்டவருமான முத்துசாமி இளங்கோவன் (சாமி) என்பவர் கொழும்பு, கதிரேசன் வீதியிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்படடுள்ளார்.

சிங்கப்பூர் பிரஜையான இவர் தொடர்பான வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற நிலையில் குறித்த வழக்கினை எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் ஒத்திவைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
கடந்த 2008ஆம் ஆண்டு மேற்படி விடுதியில் வைத்து இளங்கோவன் கைது செய்யப்பட்டார். அவர் பயங்கர வாதிகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவர் 180 நாட்களுக்கும் மேலாக பொலிஸாரால் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இவர் தொடர்பான புலன் விசாரணைகளின் போது இவர் சிங்கப்பூர் பிரஜை எனவும் பல கப்பல்களுக்கு சொந்தக்காரன் என்றும் இவரது கப்பல் ஒன்று புலிகளால் கைப்பற்றப்பட்டது என்றும் தெரியவந்தது.
தனது கப்பலை விடுவிப்பதற்காக விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தவென யாழ்ப்பாணம் சென்ற இவர், புலிகளின் பெருந்தலைவர்களுடன் இணைந்து புகைப்படங்கள் பலவற்றையும் எடுத்துள்ளார்.
இந்நிலையில் இவர் மீதான விசாரணை இன்று நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது இரு புலனாய்வு அதிகாரிகள் சாட்சியம் அளித்தனர். அத்துடன், அவசரகால சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம் ஆகியவற்றின் கீழ் இவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை சட்டமா அதிபர் வாபஸ் பெற்றுக்கொண்டார்.
இதன்பின் சட்டமா – அதிபர் குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறியதாக இவர் மீது வழக்கு தாக்கல் செய்ததை அடுத்து வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை பெப்பரவரி 15 வரை ஒத்திவைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’