வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 3 பிப்ரவரி, 2011

இலங்கை வெள்ளம்; 10 பேர் பலி

லங்கையில் மீண்டும் துவங்கியிருக்கும் கடும் மழையால் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் காரணமாக குறைந்தது பத்துப்பேர் உயிரிழந்திருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள்.
இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் மழை வெள்ளம் காரணமாக 50 ஆயிரம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். 747 குடும்பங்களைச் சேர்ந்த 3000த்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான சமைத்த உணவு மற்றும் உலர் உணவு உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
எனினும் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு இன்று நேரடியாகச் சென்று பார்வையிட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பல இடங்களில் இன்னும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் சென்று கிடைக்கவில்லை என தெரிவித்திருக்கின்றனர்.
செட்டிகுளம் பிரதேசத்தில் உள்ள சின்னத்தம்பனை, தட்டான்குளம், கந்தசாமி நகர் ஆகிய கிராமங்களுக்கான வீதிகளில் வெள்ளம் குறுக்கறுத்து பல அடி உயரத்திற்குப் பாய்வதனால், இந்தக் கிராமங்கள் போக்குவரத்தின்றி துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த மக்களுக்குத் தேவையான அவசர நிவாரண உதவிகளை மாற்று வழியின் ஊடாக அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
வவுனியா நகக்குக் கிழக்கே மகாகச்சகொடி பகுதியில் உள்ள போககாவௌ என்ற இடத்தில் இன்று காலை வயல் வேலைக்காகச் சென்ற 40 விவசாயிகள் திரும்பி வரமுடியாமல் வெள்ளம் பெருக்கெடுத்திருப்பதனால்; அவர்களை மீட்டு வருவதற்கு விசேட பொலிஸ் குழுவொன்று அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்திருக்கின்றது.
தத்தளிக்கும் திருகோணமலை
திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையின் விளைவாக மாவட்டத்தின் இயல்புநிலை மோசமாக பாதிப்படைந்து வருகின்றது.
திருகோணமலை வெள்ளம்
திருகோணமலை வெள்ளம்

பல்லாயிரக்கணக்கான மககள் இடம்பெயர்ந்து வருவதுடன் மாவட்டத்தில் உள்ள ஐம்பத்து எட்டு முகாம்களில் இடம்பெயர்ந்தோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் உறவினர் நண்பாகளின் இல்லங்களில் தஞ்சம் அடைந்து வருவதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள பெருமளவிலான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் கிழக்கு மாகாணத்தில் உள்ள அறுபது வீதமான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம் ரீ எம் நிசாம் தெரிவித்துள்ளார்.
மிதக்கும் மட்டக்களப்பு
வெள்ள நிலமை காரணமாக மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி தற்காலிக இடங்களில் தஞ்சம் பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்பகளிலிருந்து இது வரை விடுபடாத நிலையில் மற்றுமொரு வெள்ள அழிவுக்கு இக்குடும்பங்கள் முகம் கொடுத்து நிற்கின்றன.
மட்டக்களப்பு மழை வெள்ளம்
மட்டக்களப்பு வெள்ளம்


மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் வியாழனன்று மாலை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி அம் மாவட்டத்தில் 56 நலன்புரி நிலையங்களில் 5 ஆயிரம் குடும்பங்களும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சமார் 7 ஆயிரம் குடும்பங்களும் தற்காலிகமாக தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இம் மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளிலும், வீதிகளிலும் வெள்ள நீர் பாய்வதால் 25 ற்கும் மேற்பட்ட இடங்களில் தரைவழிப் போக்குவரத்து துணட்டிக்கப்டப்டுள்ளது. இதன் காரணமாக அவ் வழியாக படகுககள் மூலம் மாற்றுப் போக்குவரத்து எற்பாடுகள் செய்யப்டப்டுள்ளது.
மட்டக்களப்பிலிருந்து சகல புகையிரத சேவைகளும் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்டப்டுள்ளதாக புகையிரத தினைக்களம் இன்று மாலை அறிவித்துள்ளது.
அம்பாறை மாவட்டத்திலும் தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ள நிலை காணப்படுகின்றது.2 மீனவர்கள் இன்று படகு கவிழ்ந்து மரணமடைந்துள்ளார்கள். கடந்த 48 மணி நேரங்களில் இம் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’