13ஆவது திருத்தச் சட்டம் போன்ற அரச கொள்கைகளை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் சரியான நிலைப்பாட்டில் இல்லாமையால் சமூகங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த தனது அமைச்சுக்கு முடியாமல் இருப்பதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்
.தேர்தல் செயலகம் தனது அமைச்சிடம் மொழிபெயர்ப்பாளர்களை கேட்காமையால் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்காக இரண்டாம் மொழியை கற்க ஊக்கப்படுத்தவுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறினார்.
ஏனையோரை கற்க கேட்கும் முன் தாங்கள் கற்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் உட்பட அமைச்சில் உள்ள அனைவரும் பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இரண்டு தடவை நான்கு மணித்தியாலங்கள் தமிழ் கற்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’