வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

தயாநிதிமாறன் மீது அருண்ஷோரி குற்றச்சாட்டு

ந்தியாவில், பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் அருண்ஷோரி, தனக்கு அடுத்து அந்தத் துறைக்குத் தலைமை வகித்த அமைச்சர் தயாநிதி மாறன், சில நிறுவனங்களுக்குப் பலனளிக்கும் வகையில் விதிமுறைகளை மீறியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, வெள்ளிக்கிழமை, மத்தியப் புலனாய்வுத்துறையிடம் ஆஜராகி பல்வேறு விவரங்களை அருண்ஷோரி சமர்ப்பித்தார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்கு அடுத்து தயாநிதி மாறன், தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்ததாகவும், 2005-ம் ஆண்டு தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டு நெறிகளை மீறி அவர் செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். அதுதொடர்பாக, புலனாய்வுத்துறை அதிகாரிகளிடம் விவரங்களை அளித்ததாகவும் ஷோரி தெரிவித்தார்.
முன்னாள் பாஜக அமைச்சர் அருண்ஷோரி
முன்னாள் பாஜக அமைச்சர் அருண் ஷோரி
தயாநிதி மாறனுக்கு அடுத்ததாக, தற்போது அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் கைதாகி சிறையில் இருக்கும் ஆ. ராசா 2007-ல் அமைச்சரானார்.
இதற்கிடையில், 2005-ம் ஆண்டில், மாறன் பதவிக்காலத்தில், தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய விதிமுறைகளில், ஒரு தொலைத் தொடர்பு வட்டத்தில் செயல்படும் தொலைபேசி நிறுவனங்களின் எண்ணிக்கைக்கு வரம்பு தேவையில்லை என்ற வார்த்தை சேர்க்கப்பட்டது.
ஆனால், அப்படிப்பட்ட பரிந்துரையை, 2007-ம் ஆண்டுதான் ஒழுங்குமுறை ஆணையம் அளித்தது. அப்படியிருக்க இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அதை மாறன் சேர்த்தது எப்படி என்று அருண்ஷோரி கேள்வி எழுப்பினார்.
அதாவது, மாறன் ஆட்சியில் அவ்வாறு திட்டமிடப்பட்ட சில செயல்பாடுகளை நிறைவேற்ற முடியாமல் போனதால்தான், அவற்றை ராசா நிறைவேற்றினார் என்று அருண்ஷோரி புகார் கூறினார்.
ராசா, குற்றத்தை ஒப்புக்கொண்டு ‘அப்ரூவராக’ மாறி, அலைக்கற்றை முறைகேடுகளில் பயனடைந்தவர்களைப் பற்றிய விவரங்களை முழுமையாக வெளியிட வேண்டும் என்றும் அருண்ஷோரி கூறினார்.
தனது ஆட்சிக்காலத்தில், அனைத்து முடிவுகளும் வெளிப்படையாக, சட்டப்படியாகவே எடுக்கப்பட்டதாக புலனாவய்வுத்துறையிடம் தெரிவித்ததாகவும் அருண்ஷோரி தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’