வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

உலக பொருளாதார வீழ்ச்சிக்கு அபிவிருத்தி அடைந்த நாடுகளின் பொறுப்பின்மையே காரணம்:ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

ங்கிமுறை முறிவடைந்தமை உட்பட உலக பொருளாதாரம் வீழ்ச்சி கண்டமைக்கு அபிவிருத்தியடைந்த நாடுகள் நிதிவிடயங்களில் பொறுப்பில்லாமல் நடந்துக்கொண்டமையே காரணம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

தென்கிழக்கு ஆசிய மத்திய வங்கி ஆளுநர்களின் 46ஆவது மாநாட்டில் கலந்துக்கொண்டு பேசும்போது ஜனாதிபதி இதனை கூறினார். அங்கு உரையாற்றி அவர் மேலும் கூறுகையில்,
இரட்டை நியமங்கள், கொள்கையில் முரண்பாடுகள், யதார்த்தத்தை ஏற்காத பிடிவாதம், பல்பக்க சர்வதேச நிறுவனங்களை அரசியல்மயப்படுத்தும் முயற்சிகள், அவசர நிதியுதவியை வழங்குவதில் உள்ள அசமந்த போக்கு என்பவையே நெருக்கடியை மோசமாக்கிய காரணிகள் ஆகும். உலகளவில் தாக்கம் செலுத்தக்கூடிய பொருளாதாரங்கள் மீது உலகளாவிய நிதி சமூகம் கூடிய கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இவ்வாறான பெரிய பொருளாதாரங்களின் உறுதிப்பாடு உலக பொருளாதார நலனுக்கு அவசியமானது என அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’