வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

'யாழில் பதிவு'-த.தே.கூட்டமைப்பு வழக்கு

யாழ்ப்பாணத்தில் மக்களின் விபரங்களைப் பதிவு செய்யும் நடைமுறையை படையினர் ஆரம்பித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
நாட்டில் தற்போதுள்ள எந்த சட்டதிட்டங்களுக்கும் உட்படாதவகையில் யாழ்குடாநாட்டில் மக்களின் குடும்ப விபரங்கள் புகைப்படங்களுடன் பதிவு செய்யப்பட்டுவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

அவசரகால சட்டத்தின் விதிக்கு எதிராக முன்னர் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கொன்றில், மக்களை படையதிகாரிகள் பதிவு செய்யும் நடைமுறை, குறித்த ஒரு பகுதிக்கோ அல்லது சமூகத்துக்கோ மட்டும் நடைமுறைப்படுத்தப்பட முடியாது என நீதிமன்றம் உத்தரவு வழங்கியிருந்ததையும் சட்டத்தரணி சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
இதுதவிர, மக்களைப் பதிவு செய்வதற்கான அவசரகால சட்ட விதிமுறையையும் அரசாங்கம் கடந்த ஆண்டே அகற்றிவிட்டிருந்த நிலையில் இப்போது புதிதாக மக்கள் பதிவுசெய்யப்பட்டு வருகின்றமை சட்ட முரணானது என்பதையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
குறித்த அவசரகால சட்டவிதி அமுலில் இருந்த காலத்திலேயே சட்டமுரணானது என அறிவிக்கப்பட்ட இவ்வாறான பதிவு நடைமுறையை, படையதிகாரிகள் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்வது ஏற்றுக்கொள்ளமுடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுகிறது.
ஆனால், நாட்டில் அமுலிலுள்ள பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் விதிமுறைகளுக்கமைய தமக்குள்ள அதிகாரத்தின் மூலம் பொலிசாரே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தமிழோசையிடம் கூறினார்.
நாடு முழுவதும் பொலிசார் படிப்படியாக இந்த பதிவு நடைமுறையை மேற்கொண்டுவருவதாகவும் இராணுவத்தினருக்கும் இதற்கும் தொடர்பில்லையென்றும் இராணுவப் பேச்சாளர் மேலும் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’