வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

'ஜுலை கலவரத்திற்கு காரணமானவர்கள், யாழ் நூலகத்தை எரித்தவர்கள் இன்று தமிழர்களின் உரிமை குறித்து பேசுகின்றனர்'

ஜுலை கலவரத்தை ஏற்படுத்தி, அதற்கு அரசாங்க அனுசரணை வழங்கி, தமிழ் மக்களுக்கு பெரும் அழிவுகளை ஏற்படுத்தியவர்கள் இன்று மக்களின் சுதந்திரம், மனித உரிமை குறித்து பேசுகின்றனர். ஆசியாவின் மிகச்சிறந்த நூலகமாக விளங்கிய யாழ் நூலகத்தை தீக்கிரையாக்கியவர்கள் யாழ் மக்களின் கலாசாரம் குறித்து பேசுகின்றனர்" என இளைஞர் விவகார திறன்கள் அவிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறினார்
.தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவகத்தின் (NIBM) யாழ் கிளை , மற்றும் தென் கொரிய அரசாங்கத்தின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட யாழ் தொழில்நுட்பவியல் கல்லூரியின் புதிய கட்டிடம் ஆகியவற்றின் திறப்புவிழாவின் பின் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் அழகப்பெரும இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

"யாழ் மாவட்ட சபைத் தேர்தலில் வாக்குச் சாவடிகளுக்குள் அத்துமீறி நுழைந்து வாக்குசீட்டுகளில் மோசடி செய்து, யாழ் மக்களுக்கு வாக்குச்சீட்டில் இருந்த நம்பிக்கையை இல்லாமல் செய்தவர்கள் இன்று தமிழ் மக்களின் அரசியல் உரிமை குறித்து பேசுகின்றனர்.
தவறான பொருளாதாரக் கொள்கை மூலம் யாழ் விவசாயிகளின் பொருளாதாரத்தை அழித்தவர்கள் யாழ் விவசாயிகள் பற்றி பேசுகின்றனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் கடந்த கால அச்சம், சந்தேகம்; என்பவற்றை ஒழித்து அனைத்து மக்களும் அனைத்து இளைஞர் யுவதிகளும் ஐக்கியமாக வாழும் நிலையை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த 30 வருடகால யுத்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாணத்திற்கு நவீன தொழில்நுட்பம், முதலீடுகள் என்பன வரவில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.
தற்போது 30 வருட கால யுத்தத்தினால் இழந்த உயிர்கள், இழந்த குழந்தைப்பருவ, இளமைப்பருவ மகிழ்ச்சிகளைத் தவிர ஏனைய எல்லாவற்றையும் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
இதன் அடிப்படையில் அதிநவீன கல்வி நிறுவனங்கள் யாழ்ப்பாணத்தில் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக கல்விக்கு சமனான உயர்தரம்வாய்ந்த கல்வியை இந்நிறுவனங்களில் பெற்றுக்கொள்ள முடியும். இன்று திறக்கப்பட் NIBM கிளை விரைவில் பட்டப்படிப்புகளை பெறக்கூடிய நிறுவகமாக மாறிவிடும்.
உலகின் ஏனைய பகுதிகளைவிட இங்குள்ள மக்கள் தமது பிள்ளைகளின் கல்வி விடயத்தில் அதிக அக்கறை மிக்கவர்கள். அதனால்தான் யுத்த காலத்தில்கூட தமது பிள்ளைகளின் பாடசாலை, பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுத்துச் சென்றதை காணக்கூடியதாக இருந்தது.
அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் முன்னெடுக்கப்படும் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மேலும் பல அபிவிருத்தித் திட்டங்கள் வழக்கில் மேற்கொள்ளப்படவுள்ளன"என்றார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இவ்வைபவங்களில் பிரதம அதிதியாக பங்குபற்றினார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் துமிந்த திஸாநாயக்க, இலங்கைக்கான தென் கொரிய தூதுவர் சோய் கீ சூல், யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராசா த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், யாழ். பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோரும் இவ்வைபவத்தில் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’