வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 23 பிப்ரவரி, 2011

காமன்வெல்த் போட்டி முக்கிய அதிகாரிகள் கைது

ந்தியாவில் கடந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டிகளில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, போட்டி ஏற்பாட்டுக்குழுவின் பொதுச் செயலர் லலித் பானோட்டும், இயக்குநர் ஜெனரல் வி.கே. வர்மாவும் இன்று புதன்கிழமை சிபிஐ எனப்படும் மத்தியப் புலனாய்வுத்துறையால் கைது செய்யப்பட்டார்கள்
.காமன்வெல்த் போட்டிகளுக்கான நேரம் மற்றும் புள்ளிகள் எண்ணிக்கை குறித்து கணக்கிடும் இயந்திரத்தை சுவிஸ் நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்கு அளவுக்கு அதிகமான விலையைக் காட்டி, 107 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக சிபிஐ செய்தித் தொடர்பாளர் அறிவித்தார்.
அவர்கள் இருவரும் நாளை வியாழக்கிழமை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என அதிகாரி தெரிவித்தார்.
போட்டி ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் சுரேஷ் கல்மாதி உள்பட பல்வேறு பிரமுகர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், அவர்களிடம் விசாரணையும் நடத்தியுள்ளனர்.
போட்டிகளுக்குத் தேவையான பல்வேறு கருவிகள் மற்றும் வசதிகளை வழங்கிய பல்வேறு சர்வதேச நிறுவனங்கள், தங்களுக்கு வரவேண்டிய தொகை இன்னும் வந்து சேரவில்லை என்றும், அது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அவை எச்சரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’