வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 23 பிப்ரவரி, 2011

வடக்கில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தூதுக்குழுவினர்

லங்கை வந்துள்ள தெற்காசிய பிராந்தியத்திற்கான ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தூதுக்குழுவினர் வடபகுதியில் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்து அங்குள்ள புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து இந்த மாவட்டங்களைச் சேர்ந்த அரச அதிபர்களிடம் கேட்டறிந்துள்ளனர்
.இந்தக் குழுவிற்குத் தலைமை தாங்கி வந்துள்ள லண்டன் கிறீன் கட்சியின் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினராகிய ஜீன் லெம்பட் வவுனியாவில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், யுத்தத்தின் பின்னர் வடபகுதியில் இடம்பெற்று வருகின்ற புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்க நிலைமைகள் பற்றி அறிந்து கொள்ளவும், அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகள் இந்த நிலைமையில் எந்த அளவிற்கு ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றது என்பதையும் தெரிந்து கொள்வதற்காகவே வந்திருப்பதாகக் கூறினார்.
அத்துடன் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் என்ற ரீதியில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள நிதி என்ன வகையில் பயன்படுத்தப்படுகின்றது. பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தேவைகளுக்கு எந்த வகையில் அந்தி நிதி பயன்படுகின்றது என்பதையும் கண்டறிவதற்காகப் பல்வேறு வேலைத்திட்டங்களையும் பார்வையிடுவதற்காக வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வவுனியா மருத்துவமனை, மனிக்பாம் இடைத்தங்கல் முகாம், கண்ணிவெடி அகற்றும் பணிகள் என்பவற்றையும் இக்குழுவினர் பார்வையிட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’