வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 23 பிப்ரவரி, 2011

கடாஃபி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்

லிபியாவில் தலைவர் கர்ணல் மம்முர் கடாஃபி 24 மணி நேரத்தில் இரண்டாவது முறையாக நாட்டு மக்களுக்கு அரச தொலைக்காட்சியில் உரையாற்றியுள்ளார்.

கோழைகளும், துரோகிகளும் லிபியாவை குழப்பம் மிக்க ஒரு இடமாகக் காட்ட முயற்ச்சிக்கிறார்கள் என்றும், லிபியாவின் நற்பெயரை கெடுக்க நாட்டின் எதிரிகள் முயல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புரட்சியின் ஒரு தலைவர் என தன்னைக் கூறிக் கொண்ட அவர், அதன் அர்த்தம் என்பது தனது உயிரை தியாகம் செய்வதும் ஆகும் எனவும் கூறினார்.
கிராமப்புறங்களிலிருந்து வந்த ஒரு போராளி எனத் தன்னைக் கூறிக் கொண்ட அவர், நாட்டுக்காக வீர மரணம் அடையத் தான் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.
வல்லரசுகள் தன்னை வீழ்த்த முடியாது என்பதை அறிந்துள்ளன எனவும் கடாஃபி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிலுள்ள சிறு மனநோயாளிகள் குழு ஒன்று, இளைஞர்களுக்கு போதைப் பொருட்களையும், ஆயுதங்களையும் வழங்கி எகிப்து மற்றும் துனீஷியாவில் நடைபெற்ற நிகழ்வுகளைப் போன்ற நிலைமையை ஏற்படுத்த முயல்கிறார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
தேவைப்பட்டால் கலவரத்தை அடக்க பலத்தைப் பிரயோகிக்கப் போவதாகவும் ஆனால் அது சர்வதேச சட்டங்களுக்கு அமையவே இருக்கும் எனவும் அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஒருமைப்பாட்டுடன் விளையாடுபவர்கள் மரணத்தை எதிர்கொள்வார்கள் எனவும் கடாஃபி எச்சரித்துள்ளார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’