இலங்கையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலி சந்தேக நபர்கள் தொடர்பிலான சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு முதல் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலி என்று சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை வியாழனன்று நடைபெற்றது.
அப்போது பிரதம நீதியரசர் அசோக டிசில்வா அவர்கள், தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலி சந்தேக நபர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை சட்டமா அதிபரிடம் தாம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்தார்.
அந்தப்பட்டியலை கவனத்துக்கு எடுத்துக்கொண்டு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு அரச சட்டவாதிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
விடுதலைப்புலி சந்தேக நபர்களை காலவரையறையின்றி தடுப்புக்காவலில் வைத்திருப்பது ஒரு சட்டவிரோதமான செயல் என்று தெரிவித்த பிரதம நீதியரசர், அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்வதா அல்லது விடுதலை செய்வதா என்பது தொடர்பாக துரித தீர்மானங்களை எடுக்குமாறும் அரச சட்டவாதிக்கு உத்தரவிட்டார்.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் தற்போது பூசா முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகவும் இவர்களில் பெரும்பாலானவர்கள், 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு கைது செய்யப்பட்டவர்கள் என்றும் சட்டமா அதிபர் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’