வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 10 பிப்ரவரி, 2011

டுனிசிய, எகிப்து பாணி மக்கள் போராட்டத்திற்கு தலைமை தாங்க தயார் : ஜே.வி.பி.

டுடனிசிய, எகிப்திய மக்களைப் போல் இலங்கை மக்களும் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினால் அப்போராட்டத்திற்கு தலைமை தாங்க ஜே.வி.பி. தயார் என ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க கூறினார்
.சுகததாஸ உள்ளரங்கில் இன்று நடைபெற்ற ஜே.வி.பியின் 6 ஆவது தேசிய காங்கிரஸில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மக்கள் தமது உரிமைகளுக்காக போராட முன்வர வேண்டும் எனக் கூறிய ஜே.வி.பி. தலைவர், டுனிசியா, எகிப்து போன்ற நாடுகளில் இது சாத்தியமாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் பிரச்சினைகளை தன்னால் தீர்க்க முடியாது என்பதை அரசாங்கம் நிரூபித்துள்ளது. சமூக ஜனநாயகம் பற்றிப் பேசிய ஐ.தே.க, தீர்த்துக்கொள்ள வேண்டிய சொந்தப் பிரச்சினைகளில் சிக்கியுள்ளது. எனவும் சோமவன்ஸ அமரசிங்க தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இந்தியா, சீனா, சைப்பிரஸ், கியூபா, சுவீடன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இடதுசாரிக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கனடா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, போன்ற நாடுகளிலிருந்து ஜே.வி.பி. பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவருமான சரத் பொன்சேகாவின் சார்பில் அனோமா பொன்சேகாவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டிரான் அலஸ், அர்ஜுன ரணதுங்க, ஆகியோரும் இதில் பங்குபற்றினர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’