முன்பள்ளிச் சமூகத்தினது பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்களை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சிறப்பான முறையில் முன்னெடுத்து வருகின்றார் என வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார்.
யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்ற வடமாகாண முன்பள்ளிகளுக்கான முகாமைத்துவத் திட்ட கால்கோள் நிகழ்விற்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் முன்பள்ளிகளின் ஆசிரியர்களினதும் சிறார்களினதும் செயற்பாடுகள் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் அவர்கள் மிகுந்த கரிசனை கொண்டவராக இருந்து வருகின்றார். அத்துடன் முன்பள்ளிகளின் பௌதீக வளங்கள் தொடர்பிலும் சிறார்களின் ஆக்கச் செயற்பாடுகளிலும் குறிப்பாக முன்பள்ளி ஆசிரியர்களை அரச உத்தியோகத்தில் உள்வாங்குவதிலும் அக்கறை கொண்டவராக இருந்து வருகின்றார்.
அமைச்சர் போன்றே வட மாகாண ஆளுநரும் செயற்பட்டு வருகின்றார் என்று கூறிய இளங்கோவன் அவர்கள் சாதனை ஏற்படுத்துகின்ற ஆண்டாக இந்த ஆண்டை ஆளுநரால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
எதிர்கால வளமானதொரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு முன்பள்ளிகளின் செயற்பாடுகள் முக்கிய பங்காற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்பதாக நிகழ்வில் பிரதம விருந்தினர்களான பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வட மாகாண ஆளுநா மேஜர் ஜெனரல் ஜீ.ஏ சந்திரசிறி யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா உள்ளிட்ட விருந்தினர்கள் முன்பள்ளி சிறார்களின் இசை அணிவகுப்புடன் அழைத்து வரப்பட்டு பிரதம விருந்தினர்களால் தேசிய, மாகாண கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டன.
அரங்கில் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண முன்பள்ளிகளுக்கான முகாமைத்துவ திட்டம் பற்றிய விளக்கத்தை வடமாகாண கல்வியமைச்சின் உதவிக்கல்விப் பணிப்பாளர் ஜெயா தம்பையா நிகழ்த்தினார்.
அடுத்து யாழ்.மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராசா வடமாகாண ஆளுநரின் செயலாளர் ரங்கராஜா ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ சந்திரசிறி உரையாற்றுகையில் முன்பள்ளிச் சிறார்களின் கல்வி மேம்பாடு குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் இணைந்து பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் மகிந்த சிந்தனையின் அடிப்படையின் கீழும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் வழிகாட்டுதலின் கீழும் மாகாண முன்பள்ளிகளுக்கான முகாமைத்துவ திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் அடிப்படையில் எதிர்காலத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.
வடமாகாணத்தில் 1435 முன்பள்ளிகள் இருப்பதாகவும் இவற்றில் 3000 ஆசிரியைகள் பணிபுரிந்து வருவதாகவும் அவற்றில் 40 ஆயிரம் சிறார்கள் கல்வி பயில்வதாகவும் சுட்டிக்காட்டிய ஆளுநர் அவர்கள் முன்பள்ளிச் செயற்பாடுகளுக்காக 60 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்பள்ளிச் சிறார்களுக்கு நல்லதொரு அடித்தளத்தை இடுவதன் மூலமே சமூகத்தில் நல்ல பிரஜைகளாக அவர்களை உருவாக்க முடியும் என்பதுடன் சிறார்களை வளர்த்தெடுக்கும் போது கலை கலாசார பண்பாட்டு விழுமியங்கள்களுக்கு ஏற்ப வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு முன்பள்ளி ஆசிரியைகளுக்கு இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து பிரதம விருந்தினராக கலந்து கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்பள்ளி ஆசிரியைகள் தமது கற்பித்தல் செயற்பாடுகளை தமக்கான வேலைவாய்ப்பாக மட்டுமன்றி சமூகத்திற்கு செய்யும் சேவையாகவும் செய்யவேண்டும். அப்போது தான் வளமிக்க எதிர்கால சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும் என்றும் தொடங்கப்பட்டுள்ள முகாமைத்துவ திட்டத்தினூடாக பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுப்பதில் தாம் தொடர்ந்தும் ஆவலாக இருப்பதாகவும் அதற்கு சகலரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
அரங்கில் சிறார்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந் நிகழ்வில் கல்வித்துறைசார்ந்த உயர் அதிகாரிகளும் முன்பள்ளி சமூகத்தினரும் பெருமளவில் கலந்து கொண்டிருந்தனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’