வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

எல்.ரி.ரி.ஈ. ஆதரவாளர்களிடமிருந்து இணையவெளியை பாதுகாப்பதற்கு இணைய சிப்பாய்கள் தேவை: இராணுவத் தளபதி

மிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மற்றும் இலங்கைக்கு எதிரான சக்திகளிடமிருந்து இலங்கை தனது இணையவெளியை பாதுகாப்பதற்கு 'இணைய சிப்பாய்கள்' தேவைப்படுவதாக இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய இன்று கூறினார்
.கொழும்பில் இன்று நடைபெற்ற இணையவெளி யுத்தம் தொடர்பான கருத்தரங்கொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இணைய தடயவியல் என்பது மிக கடினமானதாகும். ஆனால், தேசிய மற்றும் நிறுவன ரீதியில் உயர்தரமான இணைய தடயவியல் பொறிமுறையைக் கொண்டிருப்பது மிக அவசியம். இந்த நோக்கத்திற்காகவும் இணைய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இணைய யுத்தத்தை எதிர்கொள்ளவும் இணைய சிப்பாய்கள் தேவை' என அவர் தெரிவித்தார்.
'இராணுவத்தின் மனிதாபிமான நடவடிக்கையின்போது இராணுவத்தின் இணைய தளமும் தாக்குதலுக்கு இலக்கானது. தற்போதுகூட எமது இணைய தளத்தில் ஊடுருவி தாக்குவதற்கு தொடர்ச்சியான முயற்சிகள் நடைபெறுகின்றன. இதுவரை எமது இணைய தளத்தை நாம் வெற்றிகரமாக பாதுகாத்து வந்துள்ளோம்' என இராணுவத் தளபதி மேலும் கூறினார்.
30 வருடகால பௌதிக ரீதியான யுத்தத்தில் நாம் வென்றுள்ளோம். ஆனால், பயங்கரவாதிகளை நாட்டிலிருந்து ஒழித்ததால் ஆயுதங்கள் முடிவுக்கு வரவில்லை. நாமும் முழு உலகமும் - பௌதிக ரீதியான யுத்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் - இணைய யுத்தம் எனும் யுத்தத்திற்கு முகம் கொடுத்துள்ளோம்.
பொய்யான பிரசாரங்களை மேற்கொள்ளும் எல்.ரி.ரி.ஈ. ஆதரவு இணையத்தளங்களை பார்வையிடுவோர் இப்போதுகூட லட்சக்கணக்காக இருக்கலாம். இவற்றை வாசிப்பவர்கள் இந்த நாட்டை பயங்கரமானதாக பார்க்கின்றனர்.
இப்போது இலங்கை மீது எவரும் பௌதிக யுத்தமொன்றை நடத்த முடியாது. ஆனால் இணையவெளி மீது தாக்குதல்களை நடத்த வாய்ப்புகள் உள்ளன' எனவும் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’