வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 21 பிப்ரவரி, 2011

சுவாமி பிரேமானந்தா காலமானார்

லங்கையைச் சேர்ந்த சுவாமி பிரேமானந்தா மஞ்சள் காமாலை நோய் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் திங்களன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 60.

திருச்சி அருகே ஆசிரமம் நடத்திவந்த பிரேமானந்தா மீது கொலை மற்றும் பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து 1995ம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் சில ஆண்டுகளில் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

இலங்கை மாத்தளையைச் சேர்ந்த பிரேம்குமார் என்ற பிரேமானந்தா அங்கே அநாதை ஆசிரமம் நடத்திவந்தார். 1983ம் ஆண்டு இனக்கலவரத்திற்குப் பின் தமிழகம் வந்து திருச்சி அருகே 1989ம் ஆண்டு புதிய ஆசிரமத்தை அவர் நிறுவினார்.
அவரது ஆசிரமத்தில் நூற்றுக்கணக்கான ஆதரவற்ற குழந்தைகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு கல்வி உள்ளிட்ட பிற உதவிகள் தரப்பட்டு வந்தன.
இந்த நிலையில்தான அவர் கொலை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கி கைதானார். 1997ம் ஆண்டில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அவருடன் சேர்த்துக் கைதுசெய்யப்பட்ட அவரது உறவினர் மயில்வாகணம் பக்கிரிசாமி என்பவர் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நிலையில் 2001ம் ஆண்டு காலமானார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’