அரசியலமைப்பு மற்றும் தேர்தல் சட்டங்களின் பிரகாரம் செயற்படுகின்ற தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு எதிராக எவரும் வழக்குத் தொடர முடியாது. இந்நிலையில் எதிர்வரும் 28 ஆம் திகதி வழங்கப்படுகின்ற நீதிமன்றத் தீர்ப்பானது தெரிவத்தாட்சி அதிகாரிகளின் தீர்மானத்துக்கு எதிராக அமையும் பட்சத்தில் அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தொடுக்கப்படும் என்று ஜே.வி.பி. எச்சரிக்கை விடுத்துள்ளது.
சட்டமா அதிபராக இருக்கின்றவர் நாட்டுக்காக செயற்பட வேண்டுமே தவிர அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதோ அரசாங்கத்தினதோ கையாளாக செயற்பட முடியாது. மேலும் நிராகரிக்கப்பட்ட மனு தொடர்பில் பரிசீலனை செய்வதற்கான அதிகாரம் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு கிடையாது என்றும் அக்கட்சி சுட்டிக் காட்டியுள்ளது.
ஜே.வி.பி. யின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் எம்.பி. யுமான அனுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கூறுகையில், தேர்தல் சட்டங்களின் பிரகாரம் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கவில்லையெனில் அல்லது தவறுகள் இடம்பெற்றிருப்பின் அது தெரிவத்தாட்சி அதிகாரிகளால் நிராகரிக்கப்படும் என்பதே சட்டமாகும்.
அந்த கையில் நடைபெறவிருக்கின்ற உள்ளூராட்சி தேர்தல்களுக்காக தாக்கல் செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 35 வேட்பு மனுக்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் 8 வேட்பு மனுக்களும் மற்றும் ஜே.வி.பி. யின் இரண்டு வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. இது அரசியலமைப்பு மற்றும் தேர்தல்கள் சட்டங்களின் பிரகாரம் தெரிவத்தாட்சி அதிகாரிகளால் எடுக்கப்பட்ட தீர்மானமாகும். எமதுவேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கான காரணத்தை நாம் உணர்ந்துள்ள அதேவேளை சட்டத்தை மதிக்கின்ற கட்சி என்ற வகையில் நிராகரித்ததை நாம் எதிர்க்கவும் இல்லை. வழக்குத் தொடரவும் இல்லை.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’