வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 21 பிப்ரவரி, 2011

மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது

2008மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் உயிருடன் எஞ்சிய ஒரே துப்பாக்கிதாரி என்று தெரிவிக்கப்படும் அஜ்மல் கஸாப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிராக யுத்தம் தொடுத்தது, பலரைக் கொலை செய்தது, தேசத்துக்கு எதிரான சதி வேலையில் ஈடுபட்டது உள்ளிட்ட கஸாப் மீதான குற்றத்தை உறுதி செய்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கஸாப்பின் மேன்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.
கடந்த வருடம் மே மாதம் கீழ் நீதிமன்றம் கஸாப்புக்கு மரண தண்டனை விதித்திருந்தது.
2008ல் கஸாப்பும் மற்ற ஒன்பது துப்பாக்கிதாரிகளும் மும்பை நகரத்தைத் தாக்கியதில் மொத்தம் 170 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
தற்போதைய தீர்ப்பை எதிர்த்து கஸாப் இந்திய உச்சநீதிமன்றத்தில் மேற்கொண்டு முறையீடு செய்ய அனுமதி உண்டு என்றும் அவர் அப்படி மேல்முறையீடு செய்ய முடிவெடுத்தால் அவருக்கு இலவச சட்ட உதவி செய்துதரப்படும் என்றும் மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’