வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 12 பிப்ரவரி, 2011

மனித உரிமை ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்களின் பெயர் முன்மொழிவு

னித உரிமை ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்களின் பெயர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இன்று சனிக்கிழமை முன்மொழியப்பட்டுள்ளது
.18ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ் அமையப்பெற்ற பாரளுமன்ற சபை இன்று சனிக்கிழமை முதல் தடவையாக இன்று சனிக்கிழமை கூடிய போதே ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்களின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.
இதற்கினங்க நீதியரசர் பிரியந்த பெரேரா தலைமையிலான இந்த ஆணைக்குழுவிற்கு தென் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் வேந்தர் கலாநிதி ஜெசீமா இஸ்மாயில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் ரி.அனந்தராஜா, முன்னாள் அரச பகுப்பாய்வாளர் கலாநிதி ஆனந்த மென்டிஸ் மற்றும் பேர்னாட் சொய்ஸா ஆகியோரின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.
பிரதமர் தி.மு.ஜயரட்ன, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம்.அஸ்வர் மற்றும் எம்.சுவாமினாதன் ஆகியோர் பாரளுமன்ற சபையின் உறுப்பினர்களாவர்.
பாரளுமன்ற சபையின் இன்றைய முதலாவது அமர்வில் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் பங்குபற்றவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’