பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த ரோஹன ஜயவர்தனவுக்கு எதிரான தடையுத்தரவு நீக்கப்படுவதற்கும் அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை 3 மாதங்களுக்குள் அல்லது மே 31 ஆம் திகதிக்குமுன் பூர்த்தியடைவதற்குமான பொறுப்பை சட்டமா அதிபர் இன்று உயர் நீதிமன்றில் ஏற்றுக்கொண்டார்.
தன்னை கட்டாய லீவில் அனுப்பியமைக்கு எதிராக பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர். ஜயவர்தன தாக்கல் செய்த வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை அமுல்படுத்தத் தவறியமையால் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரியவுக்கு எதிராக பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர். ஜயவர்தன நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்திருந்தார்.
அதையடுத்து, பொலிஸ்மா அதிபரை நீதிமன்றில் ஆஜராகுமாறும் அழைப்பாணை அனுப்பும்படி கடந்த ஜனவரி 28 ஆம் திகதி உயர் நீதிமன்ற பதிவாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய இன்று நீதிமன்றில் ஆஜரானார்.
அதையடுத்து அவருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை பிரதம நீதியரசர் அசோக டி சில்வா, பி.ஏ. ரட்நாயக்க, சந்திரா ஏக்கநாயக்க ஆகியோர் அடங்கிய குழாம், முடிவுக்கு கொண்டுவந்தது. அத்துடன் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர்.ஜயவர்தனவின் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையை ஜுன் முதலாம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’