வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 12 பிப்ரவரி, 2011

'அதிகார பரவலாக்கத்தின்போது கீழ் மட்டத்திலுள்ளவர்களின் கருத்துக்களும் பெறப்பட வேண்டும்'

திகார பரவலாக்கத்தின் போது அடிமட்டத்திலுள்ளவர்களின் கருத்துக்களும் பெற வேண்டும் என இந்திய பொது நிர்வாக நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி ராகேஷ் ஹுஜா தெரிவித்தார்.

அரசியலமைப்பு கற்கை நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதிகார பரவலாக்கம் தொடர்பிலான தேசிய மன்றம் தம்புள்ள, கன்டலம அமாயா லேக் ஹோட்டேலில் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமான முதல் நாள் அமர்வில் சிறப்புரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்திய நிர்வாக துறையில் 36 வருடங்கள் கடமையாற்றிய அனுபவமிக்கவரான கலாநிதி ஹுஜா அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 'அதிகார பரவலாக்கம் அவசியம் என்பதற்காக மேற்கொள்ளக் கூடாது. நோக்கங்களை அறிந்தே அதிகார பரவலாக்கம் மேற்கொள்ளகொள்ளப்படும்.
இன்றைய காலகட்டத்திலுள்ள அரசியல்வாதிகள் சிறப்புரிமைகளையும் சலுகைளையுமே எதிர்பார்க்கின்றார்கள். அவர்கள் மீதுள்ள பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள ஒரு போதும் தயாரில்லை.
அபிவிருத்தி தொடர்பான தீர்மானங்கள் அடிமட்டத்திலிருந்தே எடுக்க வேண்டும். ஆனால் இன்று அவ்வாறு நடப்பதில்லை.

தீர்மானங்கள் மத்திய அரசினால் தலைநகரிலிருந்து எடுக்கப்படுகின்றன. இத்தீர்மானங்களை அடிமட்டத்திலுள்ள மக்கள் மத்தியில் அமுல்படுத்த தயாராகும் போது பல சிரமங்கள் எதிர்நோக்கப்படுகின்றன.
மத்திய அரசு, மாகாண அரசு மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் என்பனவற்றுக்கிடையில் நெருங்கிய உறவு பேணப்பட வேண்டும். இதனூடாக மக்களுக்கு நிறைய அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும்.
மத்திய அரசுகள் எப்போதும் தனக்கு கீழுள்ள அரசுகளை கட்டுப்படுத்த முயற்சிக்கின்றன என' அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து நாளை சனிக்கிழமை வரை நடைபெறவுள்ள இத்தேசிய மன்றம், அரசியலமைப்பு கற்கை நிறுவனத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கலாநிதி ஜயம்பதி விக்ரமதுங்க தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இத்தேசிய மன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அரச உயர் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், புத்திஜீவிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’