தன்னைக் கொல்ல வரும் பசுவைக் கூடக் கொல்வது தவறல்ல என்றார் மகாத்மா காந்தியடிகள். ஆனாலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அதையும் கடந்த உயர்வான கருணை மிகு தலைவராக தன்னை அடையாளப்படுத்தியிருக்கின்றார்.
கடந்த 2004 மார்ச் மாதம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கொள்ளுப்பிட்டி அமைச்சு அலுவலகத்திற்குப் புலிகளால் ஏவிவிடப்பட்ட தற்கொலைக் குண்டுதாரியொருவர் அமைச்சரைக் கொன்றொழிக்கும் நோக்குடன் சென்றிருந்தார். சாதாரண பெண் போல் சென்றிருந்திருந்த தற்கொலையாளியை சரியாக இனங்கண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குறித்த தற்கொலையாளியை அமைச்சு வளாகத்தில் இருந்து தந்திரமாக அப்புறப்படுத்தியிருந்தார். அதன் பின் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தற்கொலையாளி கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார். தன் நோக்கம் நிறைவேறாத நிலையில் தற்கொலையாளி கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் வைத்து தன்னை வெடித்துச் சிதறவைத்ததோடு மட்டுமின்றி அங்கு கடமையில் இருந்திருந்த பொலிசாரையும் பலியெடுத்திருந்தார்.
இச்சம்பவம் குறித்த வழக்கு இப்போதும் நீதிமன்றில் உள்ளது. தற்கொலையாளியை அழைத்து வந்ததாகச் சந்தேகிக்கப்படும் இன்னொரு பெண்ணான சத்தியலீலாவதி என்பவர் கைதுசெய்யப்பட்டதோடு நீதி விசாரணைக்காக இன்னமும் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றார். இந்த வழக்குத் தொடர்பான சாட்சியங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் ஒருவர். ஆனாலும் நீதிமன்றம் சென்று சாட்சியமளிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இதுவரை முன் வந்ததாகத் தெரியவில்லை. எய்தவன் இருக்க அம்பை நோவதைப்போல் ஏவிவிட்டவன் இருக்க ஏவிவிடப்பட்டவர்களை தண்டிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விரும்பியிருக்கவில்லை. இது போலவே களுத்துறை சிறையில் உண்ணாவிரதம் இருந்த கைதிகளின் நலன் குறித்து அக்கறை கொண்டு நேரில் சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திட்டமிட்ட வகையில் புலிகளின் உறுப்பினர்களான கைதிகளால் மிக மோசமாக தாக்கப்பட்டிருந்தார். கோமா நிலைக்குச் சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பீனிக்ஸ் பறவை போல் உயிர் மீண்டு எழுந்திருந்த போதும் தன்னை தாக்கியவர்களை அடையாளம் காட்டுவதற்கோ அன்றி தண்டிப்பதற்கோ விரும்பியிருக்கவில்லை. இவ் விடயத்திலும் அவர் நீதிமன்றம் சென்று சாட்சியம் அளிப்பதற்கு முன்வந்திருக்கவில்லை. சிறைக் கைதிகளாக இருந்த புலி உறுப்பினர்களை தன் மீது தாக்குதல் நடத்த ஏவி விட்டிருந்த புலிகளின் தலைமையே தண்டனைக்குரியவர் என்று தீர்மானித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அப்பாவி தமிழ் மக்களின் பிள்ளைகளாகிய சாதாரண புலி உறுப்பினர்கள் வெறுமனே ஏவிவிடப்பட்டவர்கள் என்ற வகையில் அவர்களை மன்னித்திருந்தார்.
இந் நிலையில் கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்தில் நிகழ்ந்த தற்கொலை தாக்குதல் சம்பவம் குறித்து சாட்சியம் அளிக்குமாறு கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு நீதிமன்றம் தொடர்ச்சியாக அழைப்பு விடுத்து வந்திருந்தது. வழமையான தனது பகுத்தறிவு மற்றும் மனிதநேயப் பண்புகளாலும் ஏவி விட்டவர்கள் வேறு யாராகவோ இருக்க ஏவி விடப்பட்டவர்களை தண்டிப்பதை விரும்பாத காரணத்தினாலும் நீதிமன்றம் செல்வதை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தவிர்த்து வந்திருப்பதாக தெரிகிறது. இது குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. இந் நிலையில் நேற்றைய தினம் (11.02.2011) நீதிமன்றம் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீதான அழைப்பாணை என்பது இரத்துச் செய்யப்பட்டிருந்தது. அத்தோடு இவ் வழக்கு மே மாதம் 26ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
நீதியின் தீர்ப்பிற்கு சகலரும் தலைவணங்கியே தீரவேண்டும். ஆனாலும் நீதிமன்றம் தீர்ப்பெழுத முன்னரே வரலாறு சிலருக்கு தீர்ப்பெழுதிவிடுகின்றது. இந்நிலையில் தன்னையே கொல்ல வந்தவர்களை மன்னித்தருளும் கருணை மகான் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமிழ் மக்களிடையே ஒரு வரலாற்று நாயகனே.
இதுவே உண்மைநிலை என்ற நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நீதிமன்றத்தில் சரண். இவ்வாறு மட்டும் செய்திகளை வெளியிட்டு உண்மைகளை இருட்டில் தள்ளிவிடுவதால் உண்மை ஒருபோதும் ஒழியப்போவதும் இல்லை அழுக்காகிவிடப் போவதும் இல்லை.
யார் குற்றவாளிகள்?.... நீதான் குற்றவாளி என்று ஒருவரை நோக்கி சுட்டுவிரல் மட்டும் நீழும்போது மற்றவிரல்கள் நான்கும் மடிந்து சுட்டிநிற்பவரையே குற்றவாளி என்று சுட்டிக்காட்டுகின்றது.
சூரியபுத்திரன்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’