இலங்கை பொருளாதாரத்தின் மேல்மட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளது. இலங்கைக்கு வழங்கிவரும் கடன்தொகையின் ஆறாவது தவைணயை அளிப்பதற்கும் அது ஒப்புதல் அளித்துள்ளது.
உள்நாட்டுப்போரின் பின்னரான நிலைமைகளிலிருந்தும் உலகப் பொருளாதார நெருக்கடியிலிருந்தும் இலங்கை மீள்வதற்கு உதவும் பொருட்டு, சர்வதேச நாணய நிதியம் இந்தப் பெரும் கடன் தொகையை வழங்குவதற்கு 18 மாதங்களுக்கு முன்னர் இணங்கியிருந்தது.
நாட்டின் பொருளாதாரம் அடிப்படையில் மட்டத்தில் பலமடைந்துள்ளதாக தென்படுவதாக ஐ.எம்.எஃப். தெரிவித்துள்ளது.
இலங்கையின் வரவுசெலவு திட்டத்தின் துண்டுவிழும் தொகையைக் குறைப்பதற்காக முன்வைக்கப்பட்ட இலக்குகளில் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமும் பற்றாக்குறை நீடிக்கின்ற போதிலும், சுமார் 200 மில்லியன் டொலர்கள் வரையான அடுத்தத் தவணைக் கடன்தொகையை வழங்குவதற்கு ஐ.எம்.எஃப். உடன்பட்டுள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் வரவுசெலவு திட்டத்தினூடாக இலங்கை கொண்டுவர உத்தேசித்துள்ள வரி மறுசீரமைப்புத் திட்டங்களினால் சர்வதேச நாணய நிதியம் திருப்தியடைந்துள்ளது.
பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி விடயங்களில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்களைப் பாராட்டியுள்ள ஐ.எம்.எப்பின் இலங்கைக்கான பிரதிநிதி கோஷி மாதய், முப்பதுவருட கால போருக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் மெச்சத்தக்க விதத்தில் இருந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த முப்பது வருடகாலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதத்தை 5 இலிருந்து 6 ஆறுக்குள் வைத்திருக்க முடிந்துள்ளமை அதிசயமான விடயம் தான் என்று அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் அண்மைக்காலமாக வேகமாக அதிகரித்துவரும் அடிப்படை உணவுப்பொருள்களின் விலையால் நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பாதிப்புகளை முக்கிய பிரச்சனைகளென ஏற்றுக்கொண்ட ஐ எம்.எஃப்பின் பிரதிநிதி, இவையெல்லாம் வெளிக்காரணிகளாலான திடீர் பற்றாக்குறையெனவும் ஒட்டுமொத்த பணவீக்கமும் கட்டுக்குள் இருந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
2009ம் ஆண்டில் இந்த கடனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டபோது, ஐ.எம்.எஃப்பின் தலைமை இயக்குனர், இலங்கை அதன் இராணுவச் செலவினங்களை பெருமளவில் குறைத்து போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்கான சமூக பாதுகாப்பு கட்டமைப்பொன்றை உருவாக்க வேண்டுமென்ற நிபந்தனை இருப்பதாகக் கூறியிருந்தார்.
ஆனால் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்ற நிவாரண மானியங்கள் மிகக் குறைந்த அளவிலேயே இருப்பதாக மனிதநேயப் பணியாளர்கள் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
அத்தோடு, வரவுசெலவுத் திட்டத்தில் பாதுகாப்புச் செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடும் தொடர்ந்தும் எகிறிக்கொண்டே போகின்றது.
ஆனால் இந்தத் தொகையில் பெருமளவு நிதி மக்களின் அபிவிருத்திப் பணிகளுக்காகவே தற்போது செலவிடப்படுமென அரசாங்கம் வாதிடுகின்றது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’