வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

யாழில் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்; தடுக்குமாறு கோட்டாபயவிடம் கோரிக்கை

யாழ். குடாநாட்டு கடற்பரப்பினுள் இந்திய ஆழ்கடல் மீன்பிடி படகுகள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிப்பதை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரி பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் அவசர தொலைநகலொன்றை இன்று வெள்ளிக்கிழமை அனுப்பிவைத்துள்ளார்.

மாதகல், மாரீசன்கூடல், காரைநகர் கடற்றொழிலாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை யாழ். செயலகத்தில் அரசாங்க அதிபரை சந்தித்து இந்திய மீனவர் யாழ். கடற்பரப்பில் நுழைவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் இதனால் தாம் பட்டினி கிடப்பதாகவும் தெரிவித்ததுடன், இதனை தடுப்பதற்கு அரசாங்க அதிபர் நடவடிக்கை எடுக்காவிட்டால் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தை எதிர்வரும் தினங்களில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்கு முடிவெடுத்துள்ளதாகவும் மாதகல் கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் எஸ்.இராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்தே, பாதுகாப்புச் செயலாளருக்கு தொலைநகலொன்றை இன்று யாழ். அரசாங்க அதிபர் அனுப்பிவைத்துள்ளார்.
இதேவேளை, இந்திய துணைத்தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டமொன்றை நடத்துவதற்கு வடமாகாண கடற்றொழில் சமாச தலைவர் எஸ்.தவரட்ணம், மீனவ சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசித்து வருவதாக தெரியவருகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’